தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யா இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துரையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜூனாவின் மகனாக திரைத்துறையில் அறிமுகமான நாக சைதன்யா, கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ஷோஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நாயகான நடித்த இவர், கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த ஆண்டு இவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் தங்களது படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இதில் நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
இதனிடையே இன்று நாக சைதன்யா பிறந்த நாள் முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இளைய தலைமுறை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நாக சைதன்யா, தெலுகு மட்டுமல்லாமல் தமிழிலும் கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார். அவர் மீதான அன்பின் அடையாளமாக, அவரது ரசிகர்கள் சிலர் அவரது பெயரை பச்சை குத்தியுள்ளனர்.
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் பெயர்கள் மற்றும் படங்களை பச்சை குத்திக்கொள்வது ஒன்றும் புதிதல்ல என்றாலும் கூட நாக சைதன்யா தனது கையில் பச்சை குத்தியுள்ளது போன்று அவரது ரசிகர்களும் அதே அடையாளத்தை பச்சை குத்தியுள்ளனர். ஆனால் இவ்வாறு செய்யக்கூடாது என்று நாக சைதன்யா எச்சரிக்கையும் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக டிவி நேர்காணல் ஒன்றில் பேசிய நாக சைதன்யாவிடம், உங்கள பெயரை பச்சை குத்திய பல ரசிகர்களை சந்தித்துள்ளதாக கூறினீர்கள். இந்த டாட்டூவை அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இது நீங்கள் பின்பற்ற விரும்பும் ஒரு செயல் அல்ல இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அவர், முன்கையில் குத்தியிருக்கும் பச்சை ஒரு மோர்ஸ் குறியீடு. ஆனால், அது பிறந்த தேதி அல்ல, இது மிகவும் தனிப்பட்ட ஒன்று. “எனக்கு திருமணமான நாள். அதனால் ரசிகர்கள் அப்படி போடுவதை நான் விரும்பவில்லை. அவர்கள் இந்த விஷயங்களை பச்சை குத்தும்போது நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். வேண்டாம். விஷயங்கள் மாறக்கூடும், ”என்று கூறியுள்ள அவர், விவாகரத்துக்குப் பிறகும் பச்சை குத்துவதைப் பற்றி நான் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அக்டோபர் 6, 2017 அன்று சமந்தா ரூத் பிரபுவை நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டார். இந்த நாள் சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்களில் அதிகம் வைரலாக பரவியது.. திருமணமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஜோடி தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021 இல் பிரிந்தது.
இதனிடையே சமந்தா காபி வித் கரண் நிகழ்ச்சியில் தனது அறிமுகத்தின் போது, தனக்கும் நாகாவிற்கும் இடையே ஏதேனும் கடினமான உணர்வுகள் இருந்ததா என்று கேடடபோது “எங்கள் இருவரையும் (நாக சைதன்யா மற்றும் சமந்தா) ஒரு அறையில் வைத்தால், நீங்கள் கூர்மையான பொருட்களை மறைக்க வேண்டும் என்று பதிலளித்தார். எவ்வாறாயினும், "எதிர்காலத்தில் எப்போதாவது" அவர்களிடையே நிலைமை சாதகமாக மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil