நாக சைதன்யா டேட்டிங்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யா தற்போது தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஷ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது காதல் மனைவி சமந்தாவை பிரிந்த இவர், அவ்வப்போது டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாக நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் பட நடிகை சோபியாவுடன் லண்டனில் சுற்றி வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், லண்டனில் ஒரு செப்வுடன் நாக சைத்தன்யா புகைப்படம் எடுக்க அந்த புகைப்படத்தில் அவர்களுக்கு பின்னால் நடிகை இருக்க அதைப்பார்த்த ரசிகர்கள் இருவரும் டேட்டிங் செய்வது உறுதி என புகைப்படத்தை வைரலாகி வருகிறது.
பிரியங்கா இந்தியாவை காலி செய்தது ஏன்?
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தான் நடிப்பில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் தன்னை விட வயதில் குறைந்த பாப் பாடகரான நிக் ஜோன்ஸ் என்பரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். தற்போது இந்தியாவில் இருந்து வெளியேறியது ஏன் என்று கூறியுள்ள பிரியங்கா, பாலிவுட்டில் அதிக பாலிடிக்ஸ் உள்ளது. என்னை கார்னர் செய்து யாரும் என்னை காஸ்ட் செய்யவில்லை. இந்த கேம் எனக்கு பிடிக்க வில்லை. அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
வெங்கட் பிரபுவை கலாய்த்த மங்காத்தா நடிகர்
சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபுவுக்கு அந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படம் குறித்து சுவாரஸ்யமாக தகவலை பகிர்ந்துகொண்ட வெங்கட் பிரபு,
திடீர் திருமணம் ஏன்? பிரியங்கா நல்காரி விளக்கம்
சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி, தற்போது ஜீ தமிழின் சதாராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தனது காதலரும் தெலுங்கு நடிகருமான ராகுலுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பிரியங்காவுக்கு திருமணம் தள்ளிக்கொண்டடே சென்ற நிலையில், தற்போது திடீரென மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வீசா போன்ற பிரச்சினைகளால் பெற்றோர் இதில் பங்கேற்கவில்லை என்று பிரியங்கா கூறியுள்ளார்.
சகுந்தலம் படத்தில் சமந்தாவின் சம்பளம்
தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகை சமந்தா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil