தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பது குறித்து இதுவரை எந்த படத்திலும் காட்டாத அளவுக்கு நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் காட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வேறு எந்த படத்திற்கு இல்லாத ஒரு பெருமை இந்த படத்திற்கு கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் முக்தா ரவி கூறியுள்ளார்.
Advertisment
புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஏ.வி.எம் நிறுவனம் 1964-ம் ஆண்டு புதிதாக ஒரு முயற்சி எடுத்தது. காமெடி நடிகராக இருந்த நாகேஷை நாயகனாகவும், அப்போது நாயகனாக இருந்த முத்துராமனை துணை நடிகராகவும் வைத்து சர்வர் சுந்தரம் என்ற படத்தை தொடங்கியது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் சினிமா ஷூட்டிங் எப்படி நடக்கும், சினிமாவில் பாடல் ரெக்கார்டிங் உள்ளிட்ட பல வேலைகள் எப்படி நடக்கும் என்பதை அப்படியே காட்டியிருப்பார்கள். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக வாலி எழுதிய அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாடல் இன்றும் ஒரு சிறப்பான வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலான நிலைத்திருக்கிறது.
இந்த படத்தில் ஒரு சினிமா எப்படி எடுக்கிறார்கள் என்ற அனைத்து பணிகளையும் காட்டியிருந்த நிலையில், பாடல் எழுதுவது பாடல் பதிவு செய்வது எப்படி என்பதையும் காட்டிவிடலாம் என்று முடிவு செய்து, அவளுக்கென அழகிய முகம் என்ற பாடலை சினிமா பாடல்கள் பதிவு செய்வது எப்படி என்று காட்டியிருப்பார்கள். இந்த பாடலை கவிஞர் வாலி, எழுத, எம்.எஸ்.வி, ராமமூர்த்தி இருவரும் இசையமைக்க, டி.எம்.சௌந்திரராஜன் பாடலை பாடியிருந்தார்.
Advertisment
Advertisements
இந்த படம் குறித்து தயாரிப்பாளர் முக்தா ரவி கூறுகையில், காதலிக்க நேரமில்லை படத்தில், நாகேஷ்க்கு ஒரு சிறப்பான கேரக்டரை கொடுத்தவர் இயக்குனர் ஸ்ரீதர். அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நாகேஷை ஏ.வி.எம். நிறுவனம் சரியாக பயன்படுத்திக்கொண்டது. சர்வர் சுந்தரம் படம் நாகேஷை் கேரக்ரை சுற்றியே நடக்கும் கதை. அதுவரை சினிமாவில் நடிக்க அழகிய முகம், சுருட்டை முடி இவை எல்லாம் தேவை என்ற பிம்பத்தை உடைத்த படம். அதேபோல் படத்தில் சினிமா படப்பிடிப்பு எப்படி நடக்கும் என்பதை காட்டியிருப்பார்கள்.
குறிப்பாக ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்ற பாடலில் ஒரு பாடல் எப்படி கம்போசிங் செய்து பதிவு செய்யப்படுகிறது. இசை எப்படி அமைக்கப்படுகிறது என்பதை தெளிவாக காட்டியிருப்பார்கள். இதுமாதிரி ஒரு பாடல் காட்சி இதுவரை வெளியாகவில்லை. முதலில் எம்.எஸ்.வி பாடலை தொடங்க ஒன் டூ த்ரி சொல்வார். அதன்பிறகு இசை குழுவை காட்டுவார்கள். அதன்பிறகு பல்லவி வரும்போது டி.எம்.எஸ். பாடுவதை காட்டுவார்கள்.
அதன்பிறகு பாடல் காட்சி தொடங்கும் நாகேஷ் தனது ஜோடியுடன் நடனமாடுவார். இடையில் கவிஞர் வாலி பாடல் எழுதுவது போன்ற காட்சிகள் இருக்கும். இறுதியாக நடனமாடும்போது கிரேன் வைத்து படப்பிடிப்பு நடத்தியிருப்பார்கள். அந்த கிரேன் மேலே போகும்போது, அந்த பாடலுக்கான டான்ஸ் மாஸ்டர் ஆடிக்கொண்டே கைத்தட்டிக்கொண்டு இருப்பார். பாடல் எழுத தொடங்கி அது படத்தில் வருவது வரை என்னென்ன வேலைகள் இருக்கிறதோ அத்தனையும் இந்த பாடலில் காட்டியிருப்பார்கள். அந்த அளவிற்கு நேர்த்தியான ஒரு பாடல் தற்போதுவரை வரவில்லை என்று முக்தா ரவி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“