Advertisment

நட்பின் ஆழம் உயர்ந்ததா? வீழ்ந்ததா? ''நண்பன் ஒருவன் வந்த பிறகு'' விமர்சனம்

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் விமர்சனம்

author-image
WebDesk
New Update
Nanmban

அறிமுக இயக்குனர் ஆனந்த் ராம் இயக்கி நடித்துள்ள இளமை துள்ளல் படமான "நண்பன் ஒருவன் வந்த பிறகு" படத்தின் விமர்சனம்

Advertisment

கதைக்களம்: 

விமானத்தில் சக பயணியான வெங்கட் பிரபுவிடம் ஹீரோவான ஆனந்த் தனது வாழ்க்கை சம்பவங்களை கூறுவது போல் கதை தொடங்குகிறது. சென்னையில் உள்ள ஒரு காலணியில் நாயகன் ஆனந்த் சிறு வயதிலிருந்து வசித்து வருகிறார். அங்கிருந்த சிறுவர்களுடன் நட்பாக பழகி அனைவரும் ஒரு கேங்காக வளர்கின்றனர். இந்நிலையில் நாயகனுக்கு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்தே இருக்க ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் இன்ஜினியரிங் சேருகிறார்.

அதன் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஸ்டார்ட்அப் (Startup) ஒன்றை தொடங்குகிறார். ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு தோல்வியில் முடிய நண்பர்கள் ஒவ்வொருவராக பிரிந்து வேலைக்கு செல்கிறார்கள். ஆனந்தும் குடும்பத்திற்காக வேலைக்கு சிங்கப்பூர் செல்ல, அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதி கதை

நடிகர்களின் நடிப்பு:

மீசைய முறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் ராம் தான் இப்படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர். அவரின் நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. சில இடங்களில் அந்த கதாபாத்திரத்தோடு நம் வாழ்க்கையை கனெக்ட் செய்யும் அளவிற்கான எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.நண்பர்களாக நடித்திருக் கும் ஆர்ஜே விஜய், வினோத், பாலா, இர்ஃபான் என அனைவரும் சரியான பங்களிப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக விஜய்யின் நடிப்பு அட்டகாசம். விடுதலை படத்திற்குப் பிறகு இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பவானி ஶ்ரீ கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

இயக்கம் மற்றும் இசை:

கடந்த சில ஆண்டுகளாக பிரண்ட்ஷிப் பற்றிய கதைகள் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவில்லை. இன்றைய இளைஞர்களின் நட்பு, காதல், மோதல், காமெடி லட்சியம், தோல்வி என நம் அன்றாட வாழ்வில் நடக்கும் விஷயங்களை வைத்து திரைக்கதை எழுதி இருக்கிறார். முதல் பாதி கொடுத்த அந்த சுவாரசியமும், புதுமையும் இரண்டாம் பாதியில் தவறவிட்டிருப்பது படத்திற்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. காஷிஃபின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் ஓகே ரகம்.

படத்தின் ப்ளஸ்:

முதல் பாதி காட்சிகள்

 ஃப்ரெண்ட்ஷிப் கதைக்களம் 

ஆர்ஜேவிஜய்யின் நடிப்பு 

துள்ளலான பின்னணி இசை

படத்தின் மைனஸ்:

சுவாரஸ்யம் இல்லாத இரண்டாம் பாதி 

அழுத்தம் இல்லாத கதாபாத்திரங்கள் 

தெளிவில்லாத திரைக்கதை

மொத்தத்தில் நண்பர்கள் பட்டாளத்துடன் சென்றால் ஒருவேளை இப்படம் உங்களை கவரலாம். மற்றபடி ஒரு சுமாரான படமாகவே முடிகிறது இந்த "நண்பன் ஒருவன் வந்த பிறகு"

நவீன் சரவணன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment