New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/17/tamil-cinema-neplo-raj-2025-07-17-22-48-12.jpg)
ரஜினிகாந்த் - நெப்போலியன்
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
ரஜினிகாந்த் - நெப்போலியன்
எஜமான் படத்தில் இணைந்து நடித்த ரஜினிகாந்த் - நெப்போலியன் இருவரும் சந்தித்துக்கொண்ட வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், எஜமான் படத்தில் நடந்த அனுபவம் குறித்து நெப்போலியன் மனம் திறந்து பேசியுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், படங்களில் பாடகராகவும் தன்னை நிரூபித்துள்ளார். அரசியலில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி.யாக இருந்த நெப்போலியன், மத்திய அமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார்.
ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் நெப்போலியனுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அவரது மூத்த மகன் தனுஷ் சிறுயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில, அவரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வரும் நெப்போலியன், அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார்.
இந்தியா வரும்போது தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து வரும் நெப்போலியன், நேற்று முன்தினம், நடிகர் கமல்ஹாசனை சந்தித்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது. கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் நெப்போலியன் ரஜினிகாந்தை சந்தித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்.வி.உதயகுமார் இயக்கிய எஜமான் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நெப்போலியன் நடித்திருந்தார்.
வானவராயன் கேரக்டரில் நடித்து மக்கள் அனைவருக்கும் தன் மீது ஒரு வெறுப்புணர்வு வரும் வகையில் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார் நெப்போலியன். படத்தில் வல்லவராயனை (ரஜினிகாந்த்) பழிவாங்க வேண்டும் என்று அவரது மனைவி வைத்தீஸ்வரி (மீனா) வயிற்றில் குழந்தை வளர கூடாது என்பதற்காக கருவையே அழிக்கும் கேரக்டர் தான் வல்லவராயன். இந்த கேரக்டரை பார்த்து அவரை திருமணம் செய்துகொள்ளவே அவரது மனைவி, ஜெயசுதா பயந்த்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
அதன்பிறகு அவரிடம் சினிமா, நடிப்பு வேறு வாழ்க்கை வேறு என்று சமாதானம் செய்து திருமணம் செய்து வைத்துள்ளனர். அதேபோல், எஜமான் படத்தில் வில்லனாக நெப்போலியன் தான் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன், அவர் ரொம்ப சின்ன வயசு பையன் மாதிரி இருக்கிறார். அவர் எனக்கு வில்லன் என்றால் சரிப்பட்டு வருமா? என்று ரஜினி கேட்டுள்ளார். ஆனால், இயக்குநர் தான் இந்த கேரக்டருக்கு நெப்போலியன் சரியாக இருப்பார் என்று ரஜினியை சமாதானம் செய்துள்ளார்.
அதன்பிறகு படத்தில் நெப்போலியனின் நடிப்பை பார்த்த ரஜினிகாந்த் அவரை பாராட்டியுள்ளார். தற்போது ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நெப்போலியன் சந்தித்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கு நெப்போலியன் லைக் கொடுத்து இருக்கிறார். அதில் தான் இந்த திரைப்பட அனுபவம் குறித்து நெப்போலியன் பேசியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.