Advertisment

நாட்டாமை டீச்சரை ஞாபகம் இருக்கா? ஜீ தமிழ் சீரியலில் ரீ என்ட்ரி- லேட்டஸ்ட் போட்டோஸ்

நம்ம அண்ணாச்சி, ராசய்யா, கர்ணா, காதல்கோட்டை உள்ளிட்ட பல படங்களில் ரக்ஷா நடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nattamai Teacher

நாட்டாமை டீச்சர் ரீ-என்டரி

சரத்குமார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்து பிரபலமான நடிகை ரக்ஷா கடந்த சில வருடங்களாக திரைத்துறையில் இருந்து விலகியிருந்த நிலையில், தற்போது ரீ-என்டரி கொடுக்க உள்ளார்.

Advertisment

1992-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜானி வால்கர் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரக்ஷா தொடர்ந்து ராமராஜன் நடிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான வில்லுபாட்டுக்காரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுமகமானார். இந்த படத்தை கங்கை அமரன் இயக்கியிருந்தார்.

அதன்பிறகு தெலுங்கில் நடித்த ரக்ஷா 1994-ம் ஆண்டு வெளியான நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்து பிரபலமானார். தொடர்ந்து நம்ம அண்ணாச்சி, ராசய்யா, கர்ணா, காதல்கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பக்கா என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே தற்போது ஜீ தமிழின் சீதா ராமன் சீரியலில் முக்கிய கேரக்டர் மூலம் ரக்ஷா ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். ஏற்கனவே சன்டிவியின் வம்சம், நந்தினி உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்த ரக்ஷா தற்போது ஜீ தமிழ் தொடருக்கு மாறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment