நீங்க நல்லவரா? கெட்டவரா? நாயகன் கமல்ஹாசன் பேரன்; இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

1987-ம் ஆண்டு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான படம் தான் நாயகன். கமல்ஹாசனுடன் சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

1987-ம் ஆண்டு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான படம் தான் நாயகன். கமல்ஹாசனுடன் சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Tamil Cinema Actor Kamal Haasan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படம் இன்றுவரை கல்ட் க்ளாசிக் திரைப்படமாக நிலைத்திருக்கும் நிலையில், இந்த படத்தில் கமல்ஹாசனின் பேரன் கேரக்டரில் நடித்த நடிகரின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

Advertisment

1987-ம் ஆண்டு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான படம் தான் நாயகன். கமல்ஹாசனுடன் சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. காலங்கள் பல கடந்தாலும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நாயகன் படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

சமீபத்தில் 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான தக் லைப் படம் கூட நாயகன் படத்தை பற்றி தான் அதிகம் பேச வைத்திருக்கிறது. இந்த படம், காட்ஃபாதர் கதையா? அல்லது வரதராஜ முதலியார் வாழ்க்கை வரலாறா என்பது குறித்து நாயகன் படத்தை தயாரித்த முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் முக்தா ரவி சமீபத்திய ஒரு பேட்டியில், காட்ஃபாதர் கதையை எடுக்க முயற்சித்து, வரதராஜ முதலியார் கதையாக மாறிவிட்டது என்று கூறியிருந்தார்.

தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு தப்பி ஓடிய சிறுவன் வளர்ந்து பெரிய தாதாவாக உருவெடுப்பது தான் இந்த படத்தின கதை. படத்தில் கமல்ஹாசன், இளைஞர், நடுத்தர வயதான மனிதர், வயதானவர் என் 3 விதமாக கேரக்டரில் நடித்திருப்பார், சரண்யா அவரது மனைவியாகவும், நிழல்கள்ரவி அவரது மகனாகவும், நடித்திருந்தனர். கார்த்திகா என்பவர் கமல்ஹாசனின் மகளாக நடித்திருந்தார். அப்பாவின் செயல்கள் பிடிக்காத மகன், வீட்டை விட்டு வெளியேறி, போலீசான நாசரை திருமணம் செய்துகொள்வார்.

Advertisment
Advertisements

ஒருமுறை, போலீஸாக இருக்கும், நாசரை பார்க்க அவரது வீட்டுக்கு செல்லும்போது கமல்ஹாசன் தனது மகளை பார்த்துவிடுவார். மகளுக்கு ஒரு மகன் இருப்பார். அந்த மகனுக்கு சக்திவேல் என்று தனது அப்பா பெயரை வைத்திருப்பார். சக்திவேல் என்ற அந்த பேரன் தனது தாத்தாவை பார்த்து நீங்க நல்லவரா கெட்டவரா என்று கேட்டிருப்பார். இந்த வசனம் இன்றுவரை காலத்தால் அழியாத பாப்புலர் வசனமாக நிலைத்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் கூட இந்த வசனத்தை பயன்படுத்தி இருப்பார்கள்.

இந்த பேரன் சக்திவேல் கேரக்டரில் நடித்த நடிகர் பெயர் ஆதித்யா வி மோடி. இவர் தற்போது சவுண்ட மற்றும் ஸ்டூடியோ இன்ஜினியராக பணியாற்றி வரும் நிலையில், இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், கடந்த 2019-ம் ஆண்டு கமல்ஹாசனின் பிறந்த நாளில் திரையில் எனது முதல் தாத்தா பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: