/indian-express-tamil/media/media_files/SZYDX8z4cNQn42DM7VjF.jpg)
இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருக்கபதாவும் ல் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக கூறி நயன்தாராவின் அன்னப்பூரணி திரைப்படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில்,
நயன்தாராவின் 75-வது படம் என்ற விளம்பரத்துடன் சமீபத்தில் வெளியான படம் அன்னப்பூரணி. ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், உள்ளிட்ட முனனணி நடிகர்கள் பலர் நடித்திருந்த இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கடந்த டிசம்பர் 1-ந் தேதி வெளியான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.இதனிடையே அன்னப்பூரணி திரைப்படம், சமீபத்தில் ஒடிடி தளமான நெட்ஃபிளக்ஸில் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
அன்னபூரணி: தி காடஸ் ஆஃப் ஃபுட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், வால்மீகியின் ராமாயணத்தை தவறாக சித்தரித்து ராமரை விமர்சித்ததாக இந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது. படத்தின் கதை, சமையல் கலைஞராக ஆசைப்படும் ஒரு இந்து கோவில் பூஜாரியின் மகளாக இருக்கும் நாயகி, அசைவ உணவை சமைக்க நிறைய சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்கிறாள்.இந்த படத்தின் ஒரு காட்சியில், சமையல் போட்டிக்கு முன் தலையை தாவணியால் மூடிக்கொண்டு நயன்தாரா இஸ்லாமிய பிரார்த்தனை நமாஸ் செய்கிறார். படத்தில் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பு, கல்லூரியில் இருந்து அவரது தோழி ஒருவர் சமைப்பதற்கு முன் நமாஸ் செய்ததால், அவரது பிரியாணி நன்றாக சுவையாக இருந்தது என்று சொல்லி, சமையல் போட்டிக்கு முன்பும் அதையே முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த காட்சி பலரது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தி ரிபப்ளிக் செய்திகளின்படி, மும்பையில் உள்ள எல்டி மார்க் காவல் நிலையத்தில் அன்னப்பூரணி படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தபடம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கிறது. படத்தின் காட்சியில் நடிகர் ஜெய், ராமர் இறைச்சி உண்பவர் என்று கூறியது, இது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பான தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே நெட்ஃபிளக்ஸ் தளத்தில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் வரை இந்த படம் நெட்ஃபிளக்ஸ் தளத்தில் இடம்பெறாதது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியானபோது அன்னப்பூரணி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சர்ச்கைள் எதையும் சந்திக்காத நிலையில், ஒடிடி தளத்தில் வெளியான ஒரு வாரத்தில் பெரும் சர்ச்சையை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.