சமீப காலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்து அண்ணபூரணி என்ற படம் தயாராகி வரும் நிலையில்
, சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. சமீபத்தில் பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் வெளியான ஜவான் படத்தில் நாயகியாக நடித்திரந்த நயன்தாரா அடுத்து அண்ணப்பூரணி என்ற படத்தில் நடித்து வருகிறார். நீலேஷ் கிருஷ்ணா இயக்கி வரும் இந்த படத்திற்கு கிருஷ்ணா கதை எழுதியுள்ளர்.
காமெடி பாணியில் தயாராகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கத்தின் காட்சியுடன் தொடங்கும் இந்த டீசரில், அக்ரஹாரம் ஒன்றில் பாரம்பரிய பிராமண குடும்பம் வசிக்கும் சிறிய வீட்டில், குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வழிபாடுகளில் மும்முரமாக இருக்கும்போது, நயன்தாராவின் கதாபாத்திரம் நிர்வாகம் மற்றும் வணிகம் தொடர்பான புத்தகத்தை படித்துக்கொண்டிருப்பது போன்று காட்டப்பட்டாலும், உண்மையில் ஒரு சிக்கன் டிஷ் எப்படி செய்வது என்ற செய்முறையைப் படித்து வருகிறார்.
சிக்கன் டிஷ் தொடர்பான புத்தகம், நிர்வாகம் மற்றும் வணிகம் தொடர்பான புத்தகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. நயன்தாரா புடவையுடன் பாரம்பரிய தோற்றத்தில் அசத்துகிறார். அவரது தாயாக ரேணுகா வருகிறார். டீஸர் முழுவதும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ரங்காபுர விஹாராவின் எஸ்.தமனின் இசை கேட்க முடிகிறது. நடிகர்கள் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, கார்த்திக் குமார் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் டீசரைப் பகிர்ந்த நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அன்புள்ள நிலேஷ்கிருஷ்ணா உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். சினிமா மீதான உங்கள் காதல் உங்களை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும்!! உங்கள் திறமையை காட்டுவதற்கான நேரம் இது.உங்கள் அற்புதமான காட்சிகளை உலகம் காண இனியும் காத்திருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
இந்த டீசரை பார்த்து ரசிகர்கள் பலரும் நயன்தாராவை பாராட்டி வருகின்றனர். அவர்களில் ஒருவர், “நயன்தாராவை குறை கூறியவர்கள்... அவரது பாத்திரங்களில் அவரது பன்முகத் திறனைப் பாருங்கள்... அவர் எந்த விதமான சோதனையான கதைக்களங்களுடனும் பொருந்துவார்” என்று கூறியுள்ளார். "லேடி சூப்பர் ஸ்டார் மீண்டும் களமிறங்கினார்," என்று மற்றொருவர் கூறினார். மேலும் ஒருவர், “நயன்தாரா வெறுமனே நடிக்கவில்லை, அந்த கேரக்டரில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“