/tamil-ie/media/media_files/uploads/2022/12/Nayanthara2.jpg)
நடிகை நயன்தாரா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு எதிராக பேசிய நடிகர் ராதாரவிக்கு நயன்தாரா பதிலடி கொடுத்தது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நயன்தாரா. முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ள இவர், கலாச்சார விதிமுறைகளுக்கு எதிரான கேரக்டர்களில் துணிச்சலாக நடித்து புகழ்பெற்றவர். இந்திய சினிமாவில் வழக்கமான பெண் கேரக்டர்களில் இருந்து விலகி தனக்கென தனி பாணியை வகுத்து நடிப்பில் முத்திரை பதித்த நயன்தாரா, சினிமா பின்னணி இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த சில வருடங்களாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடித்து வரும் நயன்தாரா, முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தாலும் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ள நயன்தாரா இந்த இடத்திற்காக கடுமையாக உழைப்பை கொடுத்துள்ளார். மேலும் நியாயமான சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களை சகித்துக்கொண்டு சாதித்துள்ளார்.
ஆனாலும் நயன்தாராவுக்கு அவ்வப்போது கோபமும் வரும். ஆனால் இதை யாரும் அதிகம் பார்த்திருக்காத நிலையில், மூத்த நடிகர் ராதாரவி தன்னை பற்றி கூறிய கருத்துக்கு நயன்தாரா பதில் அளித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு நடந்த நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேசினார்.
நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் நாயன்தாரா நடித்திருந்தாலும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்றாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ராதாரவி பேசுகையில், நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார். அதே சமயம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் அம்மன் வேடத்தில் நடிக்க கே.ஆர்.விஜயாவைப் போன்ற ஒருவரை தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் அந்த வேடத்தில் நடிக்கலாம். பார்த்தவுடன் கும்பிட தோன்றுபவர்களையும் நடிக்க வைக்கலாம். அதே சமயம் பார்த்தவுடன் கூப்பிட தோன்றுபவர்களையும் நடிக்க வைக்கலாம். சினிமா இப்போது இப்படி ஆகிவிட்டது என்று நடிகையை அவமானப்படுத்தும் முயற்சியில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
ராதாரவியின் பெண்ணியம் குறித்து இந்த கருத்துக்கு எதிர் கருத்து சொல்லாமல் அமைதியாக இருந்த நயன்தாரா இது குறித்து தனது நிலைபாட்டை தெளிவுபடுத்துவதற்காக ஒரு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் "எனது சொந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் பாலியல் தொடர்பான கருத்து ஆகியவற்றில் ஆண்களின் பாலியல் கருத்து சுமைகளை பெண்கள் வென்றெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது போன்ற சூழ்நிலைகளைக் கையாள ஒரு உள் புகார்க் குழுவை நடிகர் நடிகர் சங்கம் எஎப்போது அமைக்கும் என்று கேள்வி எழுப்பிய நயன்தாரா, ராதாரவி விதிகளின்படி விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், ராதாரவி மற்றும் அவரைப் போன்ற பெண் வெறுப்பாளர்கள் ஒரு பெண்ணால் தான் பிறந்தார்கள் என்பதை முதலில் நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களின் நிலையை இழிவுபடுத்துவதன் மூலமும், பாலியல் கருத்துகளை அனுப்புவதன் மூலமும், இந்த பின்தங்கிய ஆண்கள் ஆணவ உணர்வுடன் இருக்கிறார்கள்.
அவர்கள் பெண்களை ஒரு கருத்துடன் நடத்தும் விதத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன், இந்த மாதிரி ஆண்களின் குடும்பங்களில் வாழும் அனைத்து பெண்களிடமும் எனது நிலை உள்ளது. அனுபவமுள்ள மூத்த நடிகராக, இருக்கும் ராதா ரவி இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும், அதற்குப் பதிலாக, அவர் ஒரு மோசமான செயலுக்கு ரோல் மாடலாகத் இருக்கிறார். பொது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களை முதன்மையாக நிலைநிறுத்திக் கொண்டு, தங்களுக்குரிய இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு சிக்கல்கள் அதிகரித்து வருகிறது. ராதாரவி போன்ற நடிகர்கள் தனது நிலையில் இருந்து வெளியேறி, பொருத்தமற்றவர்களாக மாறும்போது, அவர்கள் பிரபலமடைய இதுபோன்ற இழிவான கருத்துக்களை கூறி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.