நயன்தாராவுக்கு நேரில் 'ஐ லவ் யூ' சொன்ன ரசிகர்: விக்னேஷ் சிவன் ரியாக்ஷன்?

நயன்தாராவை வைத்து மாயா என்ற வித்தியாசமான ஹாரார் படத்தை கொடுத்த அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் கனெக்ட் .

நயன்தாராவை வைத்து மாயா என்ற வித்தியாசமான ஹாரார் படத்தை கொடுத்த அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் கனெக்ட் .

author-image
WebDesk
New Update
நயன்தாராவுக்கு நேரில் 'ஐ லவ் யூ' சொன்ன ரசிகர்: விக்னேஷ் சிவன் ரியாக்ஷன்?

கனெக்ட் படத்தின் பிரீமியர் ஷோவுக்கான தியேட்டருக்கு வந்த நயன்தாராவை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், கூட்டத்தில் ஒரு ரசிகர் நயன்தாராவுக்கு ஐ லவ் யூ சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வந்தாலும், இடையில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த மாயா, கோலமாவு கோகிலா, ஐரா, ஓ2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் தற்போது நயன்தாரா நாயகியாக நடித்துள்ள படம் கனெக்ட். சத்யராஜ், வினய் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை நயன்தாராவை வைத்து மாயா என்ற வித்தியாசமான ஹாரார் படத்தை கொடுத்த அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். லாக்டவுன் காலத்தில் கணவரும் அப்பாவும் வெளியில் சென்றுவிட இரவில் வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்களை தனது மகளுடன் நாயகி எப்படி எதிர்கொண்டார் என்பதே இந்த படத்தின் கதை.

99 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படத்திற்கு இடைவேளை இல்லை என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் இந்த படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் பிரீமியர் ஷோ சென்னையில் திரையிடப்பட்டுள்ளது. இந்த ஷோவுக்காக நயன்தாரா தனது கணவரும் கனக்ட் படத்தின் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனுடன் தியேட்டருக்கு வந்திருந்தார்.

Advertisment
Advertisements

பொதுவாக தான் நடிக்கும் படங்களுக்கான ப்ரமோஷனுக்கு தான் வரமாட்டேன் என்று முன்பே சொல்லிவிடும் நயன்தாரா தனது நிறுவனம் தயாரிக்கும் படத்திற்காக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த வகையில் கனெக்ட் படத்தின் பிரீமியர் ஷோவுக்காக வந்திருந்த நயன்தாராவை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் தியேட்டரில் திரண்டிருந்தனர்.

அப்போது தனது கணவருடன் என்டரி கொடுத்த நயன்தாரா ரசிகர்களை பார்த்து கையசைத்தபடியே தியேட்டருக்குள் செல்கிறார். அப்போது ஒரு ரசிகர் நயன்தாரா ‘’ஐ லவ் யூ’’ என்று சொல்ல, அருகில் கணவர் விக்னேஷ் சிவன் இருக்கிறார் என்றும் கூட பாராமல் நயன்தாரா உடனடியாக ‘’ஐ லவ் யூ டூ’’ என்று சொல்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: