scorecardresearch

இயக்குனராகும் பிரபல தயாரிப்பாளர் : நயன்தாரா, மாதவன், சித்தார்த் கூட்டணியில் புதிய படம்

தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கி வரும் புதிய படத்தில் நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.

Nayan Madha Sidd
மாதவன் நயன்தாரா சித்தார்த்

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்  சஷிகாந்த் இயக்கும் புதிய படத்தில் மாதவன், நயன்தாரா சித்தார்த் ஆகியோர் இணைந்து நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2010-ம் ஆண்டு வெளியான தமிழ் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான சஷிகாந்த் தனது ஒய்நாட் ஸ்டூடியோ மூலம் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, கேம் ஓவர், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக தலைகோதல் என்ற படத்தை தயாரித்த அவர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கும் படத்திற்கு டெஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. டெஸ்ட் படத்தின் மூலம் மாதவன் சித்தார்த் இருவரும் 2-வது முறையாக இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

மாதவன், நயன்தாரா ஜோடி முதல்முறையாக இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில், டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே நயன்தரா ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்து வரும் நிலையில், சமீபத்தில், லேடி சூப்பர் ஸ்டார் 75 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள மற்றொரு படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கினார்.

ஷங்கரின் முன்னாள் உதவியாளரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கி வரும் இப்படத்தில் சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல் மறுபுறம், மாதவன், பிரபல விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நடிகர் சித்தார்த், 2021 ஆம் ஆண்டு முதல் நடிப்பில் இருந்து விலகிய நிலையில் தற்போது, கமல்ஹாசனின் இந்தியன் 2  படத்தில் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema nayanthara madhavan and siddharth team up for producer sashikanth debut directorial

Best of Express