கனெக்ட் படம் தொடர்பான நேர்காணால் ஒன்றில் பங்கேற்றுள்ள நடிகை நயன்தாரா தான் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக கூறி தனது வயதையும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்காரே என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பிறகு விஸ்மயதொன்பாது, நாட்டுராஜாவு உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், 2002-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
முதல் படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்த நயன்தாரா அடுத்து ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நயன்தாரா தொடர்ந்து, கஜினி, தலைமகன், வல்லவன், பில்லா, வில்லு, ராஜா ராணி, ஆரம்பம், தனிஒருவன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சிவகாசி, மற்றும் சிவாஜி உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள நயன்தாரா ஒரு கட்டத்திற்குமேல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த மாயா, ஐரா, கோலமாகவு கோகிலா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளமத் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான்நடித்து வரும் ஜவான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மாலையாளத்தில் கோல்ட், தெலுங்கில் காட்ஃபாதர் உள்ளிட்ட படங்கள் வெளியானது.
தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் கனெக்ட் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லாக்டவுன் காலகட்டத்தில் நடக்கும் கதைக்களமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் ஹாரார் பாணியில திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இடைவேளை இல்லாமல் தயாரான இந்த படம் தற்போது இடைவேளையுடன் திரையிடப்பட உள்ளது.
இந்த படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட் அளித்த நயன்தாரவிடம், பிரபல தொகுப்பாளினி டிடி கேள்விகளை கேட்டார். அப்போது நீங்கள் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது என்று டிடி சொல்ல கிறிஸ்துமஸ் வந்தால் திரைத்துறையிக்கு வரும் 20 வருடங்கள் நிறைவு என்றும், தான் 18 வயதில் நடிக்க வந்ததாகவும் நயன்தாரா கூறியுள்ளார். 18 வயதில் நடிக்க வந்த அவர் தற்போது 20 வருடங்களை கடந்துள்ள நிலையில் அவரின் வயது 38 என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil