துணிவு படத்தின் ஷோ கேன்சல் ஆனதா?
அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. அஜித்தின் மாறுப்பட்ட நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த 11-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து நல்ல விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ஒரு தியேட்டரில் துணிவு படம் பார்க்க ரசிகர்கள் யாருமே வராததால் ஷோ கேன்சல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா பார்த்தது துணிவா? வாரிசா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் துணிவு விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய படங்கள் ஜனவரி 11-ந் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்று வரும் இந்த இரு படங்களயும் பிரபலங்கள் பலரும் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் துணிவு படத்தை பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ் புதிய படத்தின் டிரெய்லர்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் என வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில், இவரது நடிப்பில் கள்வன் திரைப்படம் தயாராகி வருகிறது. பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படம் காட்டில் நடப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை சூர்யா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
சரித்திர படத்தை விரும்பும் பேராண்மை நடிகை
எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை வசுந்தரா, அடுத்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, வட்டாரம் போராளி, பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்று கூறியுள்ளார்.
சந்தானம் படத்தின் மேக்கிங் வீடியோ
பிரபல கன்னட இயக்குனர் பிரஷாந்த் ராஜ் இயக்கி வரும் கிக் படத்தில் சந்தானம் நாயகனாக நடித்து வருகிறார். கோவை சரளா முக்கிய கேரக்ட்ரில் நடித்து வரும் இந்த படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”