Advertisment

அன்னபூரணி vs அன்னபூர்ணி: தலைப்புச் சர்ச்சையில் நயன்தாரா- லாஸ்லியா படங்கள்

நடிகை நயன்தாரா நடிப்பில் தயாராகி வரும் அன்னப்பூரணி திரைப்படத்தின் தலைப்பு ஏற்கனவே லாஸ்லியா நடிப்பில் அன்னப்பூரணி என்ற ஒரு படம் தயாராகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Annapooranai Title Issue

அன்னப்பூரணி தலைப்பு சர்ச்சை

நயன்தாரா நடிப்பில் அடுத்து தயாராகி வரும் அன்னப்பூரணி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து அதே பெயரில் பிக்பாஸ் லாஸ்லியா நடிப்பில் ஒரு படம் தயாராகியுள்ளதால் டைட்டில் சர்ச்சை வெடித்துள்ளது.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் ஷாருக்கானுடன் ஜவான் மற்றும் ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் நடித்திருந்த நயன்தாரா தற்போது அன்னபூரணி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசரில் பிரமண குடுபம்த்தை சேர்ந்த நயன்தாரா புத்தகம் படிப்பது போல் சிக்கன் சமைப்பது எப்படி என்ற புத்தகத்தை படித்துக்கொண்டிருப்பது போன்ற காட்சி சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே தற்போது படத்தின் தலைப்பும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவின படத்திற்கு அன்னபூரணி: தி காடஸ் ஆஃப் ஃபுட் அதன் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதே அன்னப்பூரணி என்ற தலைப்பில் பிக்பாஸ் லாஸ்லியா லிஜாமோல் ஜோஸ் நடிப்பில் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த தலைப்பு சர்ச்சை குறித்து லிஜமோல் ஜோஸ் நடித்த அன்னப்பூரணி படத்தின் இயக்குனர் லயனல் ஜோஷ்வா கூறுகையில்,“எங்கள் படத்தின் தலைப்பு இரண்டு கதாநாயகிகளின் பெயர்களில் இருந்து பெறப்பட்டது.

அண்ணா மற்றும் பூர்ணி, முறையே லாஸ்லியா மற்றும் லிஜோமோல் நடித்தார். இந்தத் தலைப்பின் உரிமையைப் பெற்ற ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து என்.ஓ.சி (NOC)  பெற்று, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளோம். இந்த தலைப்பு தொடர்பாக நயன்தாரா படத்தின் தயாரிப்பாளர்கள் ஜூன் மாதம் எங்களை தொடர்புகொண்டனர். ஆனால் நாங்கள் படத்தை எடுத்ததால், அவர்களின் கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை" என்று கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் தலைப்பை கொடுக்காததால், அவர்கள் அவர்கள் அதே தலைப்பை வைத்து புதிதாக ஒரு டேக்லைன் சேர்த்துள்ளது எங்ககளுக்கு  ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Nayanthara Losliya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment