கண்ணதாசனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து பல எவர்கிரீன் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், ஒரு சில பாடல்கள் மறக்க முடியாத சம்பவங்களுடன் உருவாகியுள்ளது. அந்த வகையில், இயக்குனர் ஸ்ரீதர், பெரிய ஹிட் பாடலை கேட்க, அதற்காக 2 மாதங்கள், கிட்டத்தட்ட 300-400 டியூன்கள் இசையமைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று பெயரெடுத்தவர் இயக்குனர் ஸ்ரீதர். காதலிக்க நேரமில்லை, கல்யாண பரிசு என பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், 1963-ம் ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கியிருந்தார். கல்யாண் குமார், தேவிகா இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி ராமமூர்த்தி இணைந்து இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங்கின்போது, நான் நெஞ்சம் மறப்பதில்லை என்று டைட்டில் வைத்திருக்கிறேன். இதில் வரும் ஒரு பாடல் காலத்திற்கும் மறக்காத வகையில் இருக்க வேண்டும் என்று இயக்குனர் ஸ்ரீதர் கூறியுள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்ட கண்ணதாசன் எம்.எஸ்.வி இருவரும் பாடலுக்கான கம்போசிங்கை தொடங்கியுள்ளனர்.எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரும் 2 மாதங்கள் ஓய்வில்லாமல் டியூன் அமைத்து பாடலை உருவாக்கியுள்ளனர்.
இந்த பாடலுக்கான கிட்டத்தட்ட 300-400 டியூன்கள் போட்டுள்ளார் எம்.எஸ்.வி. இதில் கண்ணதாசனுக்கு பிடித்தால் எம்.எஸ்.விக்கு பிடிக்கவில்லை. எம்.எஸ்.விக்கு பிடித்தால் கண்ணதாசனுக்கு பிடிக்கவில்லை. சில டியூன்கள் இவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தால், இயக்குனர் ஸ்ரீதருக்கு பிடிக்காமல் போயுள்ளது. கடைசியில் ஒருவரியாக மூவருக்கும் பிடித்த டியூன்தான் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை பாடல்.
இந்த பாடல் இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது. அன்று இந்த பாடலை உருவாக்கியது வேதனையாக இருந்தது. ஆனால் இன்று அந்த பாடல் சாதனையாக மாறியுள்ளது என்று எம்.எஸ்.வி குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த படத்தில் வரும் நெஞ்சம் மறப்பதில்லை பாடல் படத்தில் 4 முறை சில மாற்றங்களுடன் இடம்பெற்றிருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “