சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி; படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? புது அப்டேட்!

தக் லைப் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து நடிகர் சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கூறப்படும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைப் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து நடிகர் சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கூறப்படும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Simbu Vetrimaran

தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு கூட்டணி, புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் சிம்பு கூட்டணி, இறுதியாக ஒரு படத்தில் இணைவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 16 ஆம் தேதி சென்னை எண்ணூரில் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது என தகவல்கள் வெளியாகியுளளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன், வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி கண்ட நிலையில், கடைசியாக விடுதலை 2 படத்தை இயக்கியிருந்தார். அதன்பிறகு சூர்யா – அமீர் நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்குவதற்காக பணிகள் நடைபெற்று வந்தது. ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்த படம், கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வாடி வாசல் படத்தை தயாரிக்க இருந்த கலைப்புலி தாணு, வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் ஒரு படத்தை உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 16-ந் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எண்ணூர், அதன் கடினமான மற்றும் தொழில்துறை பின்னணி, இந்த படத்தின் களத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. வட சென்னையை மையமாகக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  

வடசென்னையின் களத்தை, அதன் ஆழத்தை வெற்றிமாறன் ஏற்கனவே தனது வட சென்னை படத்தில் காண்பித்திருந்தார். இதனால் தற்போது சிம்புடன் இணையும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமைகளான சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்பார்ப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

Advertisment
Advertisements

வெற்றிமாறனின் பாணியுடன் சிம்புவின் கச்சிதமான நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிலம்பரசன் ஏற்கனவே 'STR 49', 'STR 50' மற்றும் 'STR 51' போன்ற பிற படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாலும், வெற்றிமாறனுடனான இந்த படம் ஒரு தனிச்சிறப்பு மிக்க ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக, மணிரத்னத்தின் 'தக் லைப்' படத்தில் சிம்புவின் ஈர்க்கக்கூடிய நடிப்புக்குப் பிறகு இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 'தக் லைஃப்' படத்தில் அவரது கேரக்டர் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவராலும் பாராட்டப்பட்டது,

'வடசென்னை' மற்றும் 'அசுரன்' போன்ற அழுத்தமான படங்களை இயக்கிய வெற்றிமாறன், சிம்புவுடன் இணைந்து ஒரு வலுவான சினிமா அனுபவத்தை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளதால், ரசிகர்கள் அடுத்த சில மாதங்களில் தலைப்பு, நடிகர்கள் மற்றும் முதல் பார்வை போஸ்டர்கள் உட்பட பல அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். 

Vetrimaaran Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: