பலரையும் சிரிக்க வைத்த மனுஷன்; இவரது கல்லறையில் இப்படி ஒரு வாசகமா? லேட்டஸ்ட் போட்டோ!

தனது வித்தியாசமான சிரிப்பின் மூலம் பலரையும் சிரிக்க வைத்த நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் என்ன எழுதி இருக்கிறது தெரியுமா?

தனது வித்தியாசமான சிரிப்பின் மூலம் பலரையும் சிரிக்க வைத்த நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் என்ன எழுதி இருக்கிறது தெரியுமா?

author-image
WebDesk
New Update
Kumarimuthu

ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது அவன் இறந்தபிறகுதான் தெரியவரும். அதேபோல் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் கல்லறையில், இறப்பு தேதி பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால், தனது வித்தியாசமான சிரிப்பின் மூலம் பலரையும் சிரிக்க வைத்த நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் என்ன எழுதி இருக்கிறது தெரியுமா?

Advertisment

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக திகழ்ந்தவர் குமரி முத்து. 1940-ம் ஆண்டு பிறந்த இவர், 1980-ம் ஆண்டு தனது 40-வயதில், காளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, ஊமை விழிகள், மனைவி ரெடி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் மகேந்திரன், பாலுமகேந்திரா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து பிரபலமான குமரி முத்து தனது வித்தியாசமான சிரிப்புக்கு பெயர் பெற்றவர். இவர் சிரிப்பு சத்தத்தை வைத்தே இவரை அடையாளம் காணும் அளவுக்கு வித்தியாசமான திறமைசாளியாக இருந்த குமரி முத்து ரஜினிகாந்த் தொடங்கி, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு, விஜய் நடிப்பில் வெளியான வில்லு படம் தான் இவர் நடித்த கடைசி படமாகும். காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் முத்திரை பதித்திருந்த குமரி முத்து தனது வித்தியாசமான சிரிப்பு மற்றும் கமெடியின் மூலம் பலரையும் சிரிக்க வைத்தவர். அரசியலிலும் தி.மு.க ஆதரவாளராகவும் நட்சத்திர பேச்சாரளாகவும் இருந்த குமரிமுத்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது பெரிய மரியாதையுடன் இருந்துள்ளார். 3 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த இவர், 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

kumarimuthu111

சினிமாவிலும், நாடகத்துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்த குமரிமுத்து கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். அவரின் கல்லறை, மந்தவெளி  சென்மேரிஸ் கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கல்லறையில்,  “It is the time for the God ...to enjoy his laughter” (எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு.. ஆண்டவரே,  இது உங்களுக்கான நேரம் எஞ்சாய் பண்ணுங்க), இவரின் சிரிப்பை கடவுள் எஞ்சாய் செய்ய வேண்டிய நேரம் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைர்ரலாகி வருகிறது. தனது சிரிப்பால் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய குமரி முத்து தற்போது கடவுளை சிரிக்க வைக்க சென்றுவிட்டார் என்று கூறியுள்ளனர். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: