/tamil-ie/media/media_files/uploads/2021/02/ajith.jpg)
Actor Ajith Meet Fans : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். சினிமா பின்புலம் இல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கொன தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இவர், பைக் ரைடு, புகைப்படம் எடுத்தல், சமையல், ரைபிள் ஷூட்டிங் போன்ற பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்நிலையில் கடைசியா நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றி அனைவரும் இந்த படத்தில் பணியாற்றி வருகின்றனர்.
சதுரங்கவேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற இரண்டு மெகா ஹிட் படங்களை இயக்கி, நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்ற இயக்குநர் எச்.வினோத் வலிமை படத்தை இயக்கி வரும் நிலையில், ஹிந்தியில் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பல காலகட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அஜித் பைக் ரைடு செல்வது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில், சிக்கிமுக்கு அஜித் பைக் பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வந்தது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது ஹைதராபாத்திற்கு வந்துள்ள அஜித் தன்னை சந்திக்க காத்திருந்த ரசிகர்கள் அனைவருடனும் புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பொதுவாக விளம்பரங்களை விரும்பாத அஜித், தற்போது இந்த சாலை பயணத்தில் ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன் மூலம் அவரை சந்தித்த ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Latest picture of #Thala#Valimai ????❤️❤️ @citizen_ajithfc@AjithKulu_salem@TrendsAjith@ajithFC@starajith@AjithGirlsFC@ThalaArmyOnline@TAF_Teams@AjithFCPudhuvai#Ajithpic.twitter.com/GtsQgkCWcf
— vaitheeya lingam (@vaitheeya) February 2, 2021
"உன்னை சுத்தி பூப் போட
ஆளிருக்கும், புகழ்பாட வாயிருக்கும்
எல்லாமே நிழலானது"
"நாம் ஆசப்பட்டா அதுக்காக
வாழனும் டா, எதுக்காக ஏங்கனும் டா
எல்லாமே கொண்டாட்டமே"#Thala#Ajith ❤️#Valimai#HVinoth@thisisysr
Image credits : @ArtistryBuzz@kamlesh_nandpic.twitter.com/EzjoX8aFtf
— Kishore (@tisiskicha) February 2, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.