scorecardresearch

இது பாசமா, நட்பா? ட்விட்டரில் தனுஷுக்கு மரியாதை கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Dhanush – Aishwaryaa divorce; Aishwaryaa Rajinikanth liked the tweet posted by actor Dhanush Tamil News: நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்திருந்த நிலையில், தனுஷின் டீவீட்டை ஐஸ்வர்யா லைக் செய்திருக்கிறார்.

இது பாசமா, நட்பா? ட்விட்டரில் தனுஷுக்கு மரியாதை கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Actor Dhanush – Aishwaryaa Tamil News: தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனது தனித்துவமான நடிப்பாற்றலால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள இவர் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், கதையாசிரியர், இயக்குனர் பல துறைகளில் சிறந்தவராகவும் இருக்கிறார். மேலும், இவர் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்கள் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி நடந்தது. இந்த தம்பதிக்கு 2006-ல் முதல் மகன் யாத்ராவும், 2010-ல் இரண்டாவது மகன் லிங்காவும் பிறந்தனர்.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து உச்சநட்சத்திரம் அந்தஸ்தை அடைந்துள்ள நடிகர் தனுஷ், அவரது நடிப்பிற்காக தேசிய விருதை வசப்படுத்தி இருக்கிறார். தற்போது அவர் தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடிக்க பயணப்பட்டுள்ளார். அதேசமயம் ஐஸ்வர்யா, தமிழ் சினிமா தயாரிப்பு, திரீ டி பட இயக்கம், திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமித்து வருகிறார்.

தனுஷ் – ஜஸ்வர்யா பிரிவு

இந்நிலையில் தான், தானும் ஜஸ்வர்யாவும் பிரிய இருப்பதாக நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவும் அவ்வாறே பதிவு செய்தார். இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் பேசு பொருளாக மாறி இருந்தது. மேலும், தனுஷின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களுக்கு இடியாய் அமைந்தது. இது குறித்து சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்தனர்.

தற்போது இந்த தம்பதியை சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதில் இருந்து தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

டீவீட்டை லைக் செய்த ஐஸ்வர்யா

இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியது. முன்னதாக பட வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தனுஷ், “இனி மாறன் திரைப்படம் உங்களுடையது, ஓம் நமச்சிவாய.” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்ஸ் செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் உற்சகமடைந்துள்ளனர்.

நடிகர் ரஜினியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தனுசுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் இதற்கு தனுஷ் தான் பிடி கொடுக்கமால் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. தற்போது தனுஷின் டீவீட்டை ஐஸ்வர்யா லைக் செய்திருப்பது, இருவரும் இடையேயுள்ள பாசமா, நட்பா? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema news aishwaryaa rajinikanth likes dhanush latest tweet