scorecardresearch

நடிகர் ரஜினியின் 170 பட இயக்குநர்.. நடிகை சமந்தாவின் புதிய பட அறிவிப்பு.. மேலும் செய்திகள்

மும்பையில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில், சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்குக்கு வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் இயக்குநர் இவர் தான்!

ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேசிவருவதாக கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஏற்கனவே நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படங்கள் வந்துள்ளன.

தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அடுத்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 2018-ல் வெளியான கனா படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்து இருந்தனர்.

தற்போது உதயநிதி நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி வருகிறார்.

ரனியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலை இவர் தான் எழுதியிருந்தார்.

இயக்குநர் விஷ்ணு வர்தன் படத்துக்கு விருது

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்திற்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது.

மும்பையில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில், சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்குக்கு வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து தயாரான 83 படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது. 

இதுபோல் சிறந்த படத்துக்கான விருதை புஷ்பா படம் பெற்றது.

விஜய் கார் இன்சூரன்ஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; ஆதாரத்துடன் ரசிகர்கள் பதில் 

மேலும் இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பழம்பெரும் நடிகை ஆஷா பரேக் பெற்றார். சிறந்த நடிகை விருது மிமி படத்தில் நடித்த கீர்த்தி சனோனுக்கு வழங்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன் இயக்கிய ஷேர்ஷா படமும் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.

நடிகை சமந்தாவின் புதிய பட  அறிவிப்பு

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து சமந்தா ‘சகுந்தலம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில்  தயாராகும் இந்த படத்தை குணசேகர் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர் ஆவார்.

சகுந்தலம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரில் சமந்தா மயில்களுக்கும் மான்களுக்கும் நடுவில் வனப் பகுதியில் அமர்ந்திருக்கிறார்.

நடிகை காய்திரியின் இன்ஸ்டாகிராம் முடக்கம்

 நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை காயத்ரியின் சமூக வலைதள கணக்கான இன்ஸ்டாகிராம் முடங்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக காயத்ரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. அதை மீட்கும் பணிகள் நடக்கின்றன. எனவே எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஏதேனும் தகவல்கள் வந்தால் அதை புறக்கணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

நடிகர் – நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு தொடங்கி, தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்பு நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக அதை மீட்டுவிட்டேன் என்றும் தெரிவித்து இருந்தார். 

இந்தநிலையில் தற்போது நடிகை காயத்ரியின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema news cinema round up entertainment stories415123