பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60-வது வயதில் 2-வது திருமணம் செய்துகொண்ட தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தனது திருமணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்ரம் நடிப்பில் வெளியான தில் படத்தில் கெட்ட போலீஸ் ஆபீசராக கலக்கிய ஆஷிஷ் வித்யார்த்தி பகவதி, தமிழன் உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு வில்லனாகவும், கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாகவும் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இந்திப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ஆஷிஷ் வித்யார்த்தி தற்போது 60-வயதில் 2-வது திருணம் செய்துகொண்டார்.
கொல்கத்தாவை பேஷன் தொழிலதிபர் ரூபாலி பருவாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், 60-வயதில் 2-வது திருமணம் செய்துகோள்ள என்ன காரணம் என்பது குறித்து ஆஷிஷ் வித்யார்த்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பதிவில், நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வித்தியாசமானது. நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சவால்கள், வெவ்வேறு பின்னணிகள், கல்வி மற்றும் நாம் நினைக்கும் விதம் என அனைத்திலும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும். நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தொழில்கள் உள்ளன. நாம் அனைவரும் வெவ்வேறு சமூக அடுக்குகள், வெவ்வேறு நாடுகள், மதங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் கொண்டுள்ளோம். ஆனால் நம் அனைவருக்கும் பொதுவான ஒன்று, மகிழ்ச்சி. நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம்.
எனது முதல் மனைவி பிலோ உடனான உறவு கடந்த இரண்டு ஆண்டுகளாக கஷ்டமாக இருந்தது, அதன் பிறகு நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.“22 வருடங்களுக்கு முன் நானும் பிலோவும் சந்தித்து திருமணம் செய்து கொண்டோம். அது ஒரு அற்புதமான தருணமாக இருந்தது. ஆனால் எப்படியோ கடந்த சில ஆண்டுகளாக, எங்களின் மகிழ்ச்சியான வாழக்கையின் இந்த அழகான இன்னிங்ஸுக்குப் பிறகு எதிர்காலத்தை எப்படி நகர்த்துவது என்பதை நாங்கள் உணர்ந்தோம் என்பதை பிலூவும் நானும் சுமூகமாக பிரிந்தோம்”
எங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள முயன்றாலும் அது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவது போலத்தால் இருக்கும். அப்படி செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. மகிழ்ச்சியை நாம் அனைவரும் விரும்புகிறோம், இல்லையா? அதனால் தான் நாம் இணக்கமாக நடக்க முடியாவிட்டால், தனித்தனியாக நடப்போம், ஆனால் இணக்கமாக இருப்போம்” என்று முடிவு செய்து பிரிந்ததாக ஆஷிஷ் கூறியுள்ளார்
மேலும் “நான் ஒருவருடன் பயணம் செய்ய விரும்புவதால் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. எனக்கு அப்போது 55 வயது, நான் யாரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபோது தான் நான் ரூபாலி பருவாவை சந்தித்தேன். “நாங்கள் பேசி பழகினோம். பின்னர் நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள தொடங்கிய போது இருவரும் கணவன் மற்றும் மனைவியாக ஒன்றாக நடக்கலாம் என்று நினைத்தோம், அதனால், ரூபாலியும் நானும் திருமணம் செய்துகொண்டோம்.
அவளுக்கு 50 வயது, எனக்கு 57 வயது, 60. ஆனால் வயது ஒரு பொருட்டல்ல என் தோழி. நாம் ஒவ்வொருவரும் எந்த வயதினராக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்,” ஒவ்வொருவரின் வாழ்க்கைத் தேர்வுகளையும் நாம் ‘மதிக்க வேண்டும். ஒவ்வொருவரும் வித்தியாசமாக, நகர்ந்து கொண்டே போகலாம். ஆனால் பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை மதிப்போம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”