scorecardresearch

விக்னேஷ் சிவனுக்கு 3-வது திருமணம்? டாடா படக்குழுவுக்கு தனுஷ் பாராட்டு : டாப் 5 சினிமா

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரது வீட்டில் யானை தந்தங்கள் கிடைத்துள்ளது.

விக்னேஷ் சிவனுக்கு 3-வது திருமணம்? டாடா படக்குழுவுக்கு தனுஷ் பாராட்டு : டாப் 5 சினிமா

போயஸ் கார்டனில் தனுஷ் வீடு கட்ட காரணம் இதுவா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக இவர் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் தயாராகி வருகிறது. இதனிடையே சமீபத்தில் போயஸ் கார்டனில் தனது புதுவீட்டின் கிரபிரவேசத்தை நடத்தினார். இதனிடையே ரஜினியின் மருமகனாக இருந்தாலும் தனுஷின் பெற்றோரை ரஜினிகாந்த் தரக்குறைவாக நடத்தியதே தனுஷ் போயர்ஸ் கார்டனில் வீடு கட்ட காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவனுக்கு 3-வது திருமணமா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குனர் விக்னெஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில், சமீபத்தில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார் விக்னேஷ் சிவன். இதனிடையே இவர்கள் திருமணம் நடந்த நேரம் சரியில்லை என்று ஜோசியர் ஒருவர் கூறியுள்ளார். ஏற்கனவே தோஷம் என்பதால் முதலில் வாழை மரத்திற்கு தாலி கட்டி 2-வது முறையாக நயன்தாராவுக்கு கட்டிய விக்னேஷ் சிவன் அடுத்து 3-வது முறையாக மீண்டும் நயன்தாரா கழுதில் தாலி கட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் மோகன்லால் மனு தள்ளுபடி

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரது வீட்டில் யானை தந்தங்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், யானை தந்தம் வைத்திருக்க தன்னிடம் சான்றிதழ் உள்ளதாகவும், இந்த தந்தத்திற்காக யானையை சொல்லவில்லை என்றும் மோகன்லால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இது குறித்து மோகன்லால் தரப்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

விஷால் படப்பிடிப்பில் விபத்து

லத்தி படத்திற்கு பிறகு விஷால் நடித்து வரும் படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் லாரியை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டபோது விபத்து ஏற்பட்டது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

டாடா பட நடிகர் நடிகைக்கு தனுஷ் பாராட்டு

சமீபத்தில் வெளியான டாடா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நடித்த பிக்பாஸ் கவின், அபர்னா தாஸ் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இவர்கள் இருவருக்கும் போன் செய்து நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் நடிகர் கவினுக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், தனது தயாரிப்பில் கவின் ஒரு படத்தில் நடிப்பார் என்று கூறியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema news dhanush whishes to dada team top 5 cinema news

Best of Express