பாலியல் வீடியோக்களை படம் பிடித்து வெளியிட்ட நடிகை கைது: தமிழில் நடித்தவர்?

Pornographic Issue Hindi actress arrested : ஆபாச வீடியோக்களை படம்பிடித்தது மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது தொடாபாக இந்தி நடிகையும் முன்னாள் ஆசிய பிகினி போட்டியில் சாம்பியனுமான கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

Pornographic Issue Hindi actress arrested : இந்தியில் கடந்த 2013 வெளியான பிலிமி துனியா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கெஹானா வசிஸ்த். அதன்பிறகு ஒரு சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள அவர், ஏராளமான மியூசிங் வீடியோக்கள், டெலிவிஷன் தொடர்கள், மற்றும் வெப்சீரியஸ்களில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாக பேய்கள் ஜாக்கிரதை படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

வந்தனா திவாரி, என்ற பெயர்கொண்ட நடிகை கெஹானா வசிஸ்த், தற்போது ஆபாச வீடியோக்களை படம் பிடித்தது மற்றும் வலைதளங்களில் பதிவேற்றியது தொடர்பாக  மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வரும் திங்களன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  நடிகை கெஹானா வசிஸ்த், ஆபாச வீடியோக்களை படம்பிடித்து அதனை ஒரு வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  2019 ஆம் ஆண்டில், கெஹானா இதயக்கோளாறு காரணமாக அவதிப்பட்ட நிலையில்,  மும்பையின் மாத் தீவில் தனது வலைத் தொடரின் செட்களில் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவதுகள், அவர் உட்கொள்ளும் சில ஆற்றல் பானங்கள் ( எனர்ஜி ட்ரிங்) ஏற்படுத்தும் பாதிப்புகளால் அவருக்கு இதய கோளாறு ஏற்பட காரணமாக இருக்காலம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.  கடந்த 2012 ஆம் ஆண்டில் மிஸ் ஆசியா பிகினி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், அதன்பிறகு பிரபலமான ஒரு நபராக வெளிச்சத்திற்கு வந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema news hindi actress gehana vasisth arrested for pornographic issue

Next Story
நிச்சயதார்த்த வீடியோ: வாணி ராணி சீரியல் நடிகை கலக்கல் கொண்டாட்டம்serial actress nakshathra, actress nakshathra nagesh, nakshathra engagement video, சன் டிவி, சீரிய நடிகை நக்‌ஷத்திரா, நடிகை நக்‌ஷத்திரா நிச்சயதார்த்தம், வீடியோ, sun tv serial actress nakshathra, tamil news, tamil entetainment news, nakshathra wedding
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com