Advertisment

ஞானியும் புயலும்… துபாயில் பொழிந்த அன்பு மழை!

Ilaiyaraaja meets AR Rahman at Firdaus studio in Dubai; photos goes viral in social media Tamil News: இசைஞானி இளையராஜாவுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அதற்கு ரசிகர்கள் அன்பு மழை பொழிந்து வருகின்றனர்.

author-image
WebDesk
Mar 07, 2022 11:15 IST
Tamil cinema news: Ilaiyaraaja visits AR Rahman’s Firdaus studio in Dubai

Tamil cinema news: இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர், இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரர், தனது இசையின் மூலம் உள்நாட்டு மக்களை மட்டுமின்றி வெளிநாட்டவரையும் கட்டிப்போட்டவர், புகழின் உச்சிக்கு சென்றாலும் எந்த கர்வமும் இல்லாமல் அமைதியாக இருப்பவர், இப்படி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றியும் அவரிடம் காணப்படும் அற்புத குணங்கள் பற்றியும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

Advertisment
publive-image

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்கும் பணிகளில் இருந்து வருகிறார். மேலும் அவர் பெண் இசை கலைஞர்களைக் கொண்ட 'ஃபிர்தெளஸ் ஆர்கெஸ்ட்ரா' என்ற இசைக்குழுவையும் துபாயில் நடத்தி வருகிறார். இந்த இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி 'துபாய் எக்ஸ்போ 2020' என்ற நிகழ்வில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது துபாயில் இருந்து வருகிறார்.

publive-image

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவுக்கு இசைஞானி இளையராஜா திடீர் விசிட் அடித்துள்ளார். அப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இசைஞானி இளையராஜாவும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானே தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த இணைய வாசிகளும் இரு ஜாம்பவான் இசைமைப்பாளர்களின் ரசிகர்களும் அந்த பதிவிற்கு லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். மேலும், ஞானியும் புயலும் ஒரே ப்ரேமில் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர் ஒருவர், "ஹிந்தி பாட்டுக் கேட்டுக்கிட்டிருந்த தமிழர்கள தமிழ் பாட்ட கேட்க வெச்ச ஞானியும்.., ஹிந்தி பாட்டு கேட்டுக்கிட்டுருந்த ஹிந்தி காரங்கள தமிழ் பாட்ட கேட்க வெச்ச புயலும்.." என்று பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பதிவில் அவர், "ஃபிர்தெளஸ் ஸ்டூடியோவிற்கு மாஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்பதில் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் நங்கள் இசைக்கும் வண்ணம், எங்களுக்காக, எங்களின் ஸ்டூடியோவில் ஒரு அற்புதமான இசையமைப்பார் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜா கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட லைவ் இசை கச்சேரிகளை இளையராஜா மீண்டும் நடத்த இருக்கிறார். இதில் ஒரு லைவ் இசைக்கச்சேரியை துபாயில் நடத்துகிறார். இதற்காக அவர் துபாய் சென்றுள்ள நிலையில், அங்கு அவர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து இருக்கிறார்.

publive-image

இளையராஜா

இளையராஜா க்ளாப், தமிழரசன், துப்பறிவாளன் 2, நானு நீனு ப்ரீத்தி, வாராயோ வெண்ணிலாவே, ஸ்ரீ சனீஸ்வர ஸ்வாமி கல்யாணம், ரங்க மார்த்தாண்ட, பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Entertainment News Tamil #Dubai #Tamil Cinema #Ilayaraja #Isaignani Ilayaraja #Ar Rahman #Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment