scorecardresearch

லேடிஸ்க்கு புடிச்ச மாதிரி பியூட்டிஃபுல் ஸ்டோரி: புதிய சீரியல் பற்றி தேவயானி

Actress Devayani News serial tamil news: நடிகை தேவயானி 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார்.

Tamil cinema news in tamil actress Devayani reentry in zee tamil tv serial

Tamil cinema news in tamil: தமிழ் சினிமாவில், 90களில் உச்சத்தில் இருந்த நடிகைகளுள் ஒருவர் நடிகை தேவயானி. அப்போது அவரைப்பற்றி தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு பிரபலமான ஒருவராக இருந்தார். தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா போன்றோரின் முக்கிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘சூர்யவம்சம்’ இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. குடும்ப பாங்கான படங்கள் நடித்த தேவயானி, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருந்தார். மற்றும் இவர் நடித்த பல படங்கள் வசூல் சாதனை செய்தது.

பல திரைப்படங்களில் நடித்து எண்ணெற்ற விருதுகளை வாங்கி குவித்த நடிகை தேவயானி. சின்னத்திரையிலும் ஒரு வலம் வந்தார். இவர் நடித்த கோலங்கள் சீரியல் பட்டிதொட்டியெல்லாம் பரவலாக பார்க்கப்பட்டது. சுமார் 6 வருடங்களுக்கு மேல் ஓடிய அந்த தொடரில் மிக சிறப்பாக நடித்திருப்பார். இந்த தொடர் பற்றி அறியாத 90ஸ் கிட்ஸ் எவருமே இலர் எனலாம். அந்த அளவிற்கு சின்னத்திரையில் ஹிட் அடித்த தொடராக இருந்தது.

இந்த நிலையில், 12 வருடங்கள் கழித்து மீண்டும் சின்னத்திரையில் தோன்ற உள்ளார் நடிகை தேவயானி. ஜீ- தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 22 முதல் ஒளிபரப்பாக உள்ள ‘புதுப்புது அர்த்தங்கள்’ தொடரில் தான் நடிக்கிறார். இந்த தொடரில் குடும்ப பொறுப்பை தாங்கும் ஒரு குடும்ப தலைவியாக நடிக்கிறார். தற்போது இந்த தொடரின் புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema news in tamil actress devayani reentry in zee tamil tv serial

Best of Express