scorecardresearch

உருக்கி விட்ட வெள்ளி ஜரிகை… விண்மீனாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் கிளிக்ஸ்

Actress Keerthy Suresh latest photoshoot photos Tamil News: நடிகை கீர்த்தி சுரேஷ் விளம்பரத்திற்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிறது

Tamil cinema news in tamil Actress Keerthy Suresh latest photoshoot photos

Tamil cinema news in tamil: தற்போது தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ’இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

தொடர்ந்து இவர் சிவகார்திகேயனுடன் நடித்த ‘ரஜினிமுருகன்’ ‘ரெமோ’ ஆகிய படங்கள் ஹிட் கொடுக்க, தமிழின் முன்னணி ஹீரோக்களான ‘விஜய்’ மற்றும் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார்.

கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்த ‘நேனு சைலசா’ ‘நேனு லோக்கல்’ போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. மேலும் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்திற்கு தேசிய விருது பெற்றார்.

இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வரிசையாக நிறைய படங்கள் கையில் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது போட்டோஷூட், விளம்பர படங்கள் போன்றவற்றிலும் தோன்றி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் விளம்பரத்திற்காக ‘வெள்ளி’ உடையில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பின்னர் அவற்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema news in tamil actress keerthy suresh latest photoshoot photos