ரூ20 லட்சம் எஸ்யூவி கார்: பாரதி கண்ணம்மா நடிகையின் ‘மாற்றம்… முன்னேற்றம்’

Bharathi Kannama serial actress neepa tamil news: தான் புதிதாக வாங்கியுள்ள காருடன் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை நீபா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

Tamil cinema news in tamil bharathi Kannama serial actress neepa buys a new car

 Tamil cinema news in tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற சீரியலாகவும், அதிக பார்வையாளர்களைக் கொண்ட சீரியலாகவும் உள்ளது. மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த தொடரில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளனர். 

இந்த சீரியலில் வரும் சில கதாபாத்திரங்களில் புதிய என்ட்ரீயாக நிறைய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை நீபா, இவர் ‘காவலன்’, ‘பெருசு’, ‘பள்ளிக்கூடம்’, ‘தோட்டா’, ‘கண்ணும் கண்ணும்’, ‘அம்முவாகிய நான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சின்னத்திரை தொடர்களிலும் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். தற்போது பாரதிகண்ணம்மா சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த தொடரில் இப்போது இவரை சுற்றிய கதை தான் கடந்த சில நாட்களாக காட்டப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நடிகை நீபா ரூ20 லட்சம் மதிப்புள்ள எஸ்யூவி எலெக்ரிக் கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளாராம். அந்த புதிய காருடன் நின்று அவர் எடுத்துக் கொண்ட  புகைப்படங்களை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதோடு அவரது ரசிகர்கள் கார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் என்று கமெண்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema news in tamil bharathi kannama serial actress neepa buys a new car

Next Story
சில்லுனு ஒரு காதல் காயத்ரி மாற்றம்: புதுசா வர்றவங்க செம்ம டான்ஸராம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express