New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/03/kabadi-18.jpg)
Vanitha vijayakumar’s next film tamil news: பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார், நடிகர் பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் மூலம் பிரபலமானவர். இவரின் அதிரடியான 'பஞ்'களுக்கு தனி ரசிகர்களே உண்டு. தற்போது மிகவும் பிரபலமாக உள்ள விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1ன் டைட்டில் வின்னர் ஆவார். தொடர்ந்து விஜய் டிவியில் அவ்வப்போது தோன்றி தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வனிதா, தற்போது திரைபடங்களில் நடிபதில் பிஸியாகி உள்ளார்.
நடிகை வனிதா, ஹீரோயின் சப்ஜெட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'காற்று' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து 'நடமாடும் நகைக்கடை' ஹரி நாடார் ஜோடியாக '2கே அழகானது காதல்' படத்தில் நடித்து வருகிறார். அதோடு இன்னும் பல படங்கள் கைவசம் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'அந்தாதுன்' படத்தின் ரீமேக்கான 'அந்தகன்' படத்தில் நடிக்க உள்ளார். இந்த ரீமேக் படத்தில் நடிகர் பிரசாந்த், மற்றும் நடிகை சிம்ரன் நடிக்க, நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்குகிறார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்ககளை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரசாந்த் பதிவிட்டிருந்தார். அந்த ட்விட்டிற்கு கமெண்ட் ட்வீட் செய்த நடிகை வனிதா, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தோடு, படக்குழுவோடு இணைய காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
All the best from the bottom of my heart @actorprashanth ...kill it...cant wait to join the team https://t.co/Pdxb2cdksF
— Vanitha Vijaykumar (@vanithavijayku1)
All the best from the bottom of my heart @actorprashanth ...kill it...cant wait to join the team https://t.co/Pdxb2cdksF
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) March 10, 2021
இந்தியில் வெளியாகிய 'அந்தாதுன்' படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தபு, மற்றும் ராதிகா ஆப்தே போன்ற முக்கிய நட்சதிரங்கள் நடித்திருப்பார்கள். இதை 'ஏஜென்ட் வினோத்', 'பட்லாபூர்', போன்ற திரில்லர் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருப்பார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.