அஸ்வினுடன் அழகிய குழந்தை: பிக்பாஸில் பிரபலமான இந்த வாண்டுவை தெரிகிறதா?

Dance master sandy daughter Lala with cook with comali Ashwin viral photo: குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் சாண்டி மாஸ்டர் மகள் லாலா எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil cinema news in tamil: dance master sandy daughter Lala with cook with comali Ashwin viral photo

Tamil cinema news in tamil: தமிழ் சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவர் ‘மாஸ்டர் சாண்டி’. இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன இயக்குநராகவும், மேடைக்கான நடனங்களையும் தொகுத்து வழங்குபவராகவும் பணியாற்றி வருகிறார். நடன இயக்குநர் கலா மாஸ்டரிடம் மாணவனாக சேர்ந்த சாண்டி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியும் பெற்றார். மேலும் சில ஜோடிகளுக்கு நடன ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 

தொடர்ந்து நடன இயக்குநராக பல படங்களில் பணியாற்றி வரும் சாண்டி, தமிழ் திரையுலக பிரபலம் காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3ல் சாண்டி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் நண்பன் கவினுக்கு சப்போர்ட்டாக இருந்த அவருக்கு, கலவையான விமார்சங்கள் கிடைத்தது. மேலும் அவருடை மகள் லாலாவை இந்த நிகழ்ச்சி வாயிலாக அறிமுகம் செய்தும் இருந்தார். 

அப்போது சாண்டியுடன் சேர்ந்து மகள் லாலாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானர். அந்த நிகழ்ச்சியில் குட்டி  குழந்தையாக இருந்த லாலா, தற்போது நன்கு வளர்ந்து லாலாவா இது என்று கேட்டுக்கும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். சமீபத்தில் லாலா குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema news in tamil dance master sandy daughter lala with cook with comali ashwin viral photo

Next Story
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருதுdadasaheb phalke award, rajinikanth, super star rajinikanth, தாதாசாகேப் பால்கே விருது, ரஜினிகாந்த், ரஜினிக்காந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு, rajinikanth gets dadasaheb pahalke award, tamil cinema, indian cinema
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express