/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-18T101422.908.jpg)
Tamil cinema news in tamil: தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதனை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம், ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவர் நடிகர் ஆதியை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-18T102223.777.jpg)
நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் தற்போது ‘சிவுடு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை தமிழ் சினிமா இயக்குநர் சுசீந்திரன் இயக்குகிறார். ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-18T102312.801.jpg)
முன்னதாக, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நிக்கி கல்ராணி ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது இருவரும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், ஜூலை 2020 இல் ஆதி தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிக்கி கலந்துகொண்டது முதல் இருவரும் காதலிக்க தொடங்கியதாக கூறப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/Screenshot-2022-03-18-at-10.23.51-AM.png)
சில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து ஒன்றாக வெளியேறும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இது அவர்கள் இருவரின் காதல் பற்றிய வதந்திகளை மேலும் தூண்டியது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-18T102459.913.jpg)
இந்த நிலையில், தற்போது நடிகை நிக்கி கல்ராணிக்கும் நடிகர் ஆதிக்கும் திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த வருடம் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவருமே தற்போது வரை இதை உறுதியாக அறிவிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.