Sivakarthikeyan Tamil News: தொலைகாட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமாவார்கள் பலர் இருக்கிறார்கள். இதில் சிவகார்த்திகேயனுக்கு தனி இடம் உண்டு. தமிழில் முன்னணி ஹீரோவாக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய காமெடி டிவி ஷோ மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டைமிங் காமெடிக்கு பெயர் போன அவர் கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகினார்.
தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என ஹிட் படங்களை கொடுத்து டிவி விருதுகளை பெற்றார். மேலும், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, நான்கு எடிசன் விருதுகள், மூன்று SIIMA விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் என விருதுகளை குவித்தார். தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸின் கீழ் படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

ரஜினி முருகன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் அடையாளமான காமெடி நடிப்பை மறந்து புதிதுபுதிதாக முயர்த்திருந்தார். இதனால் தமிழ் சினிமாவில் பெருத்த பின்னடைவை சந்தித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படம் அவரது கேரியரில் திருப்புமுனையாக அமைத்துள்ளது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டர் அதிபர்களை ‘டாக்டர்’ குளிரவைத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்து இருக்கிறதாம். அவர் கேட்கிற சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள் என்றும், ‘டாக்டர்’ பட வெற்றி குஷியால் சிவகார்த்திகேயன் சம்பளத்தை ரூ.30 கோடிக்கு உயர்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வெளியாக வில்லை.

நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் தொலைகாட்சியில் வேலை செய்த போது, ரூ. 2000 ஆயிரம் தான் சம்பளமாக வாங்கி வந்துள்ளாராம்.இன்று பல கோடிகளை சம்பளமாக வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“