'கூழாங்கல்'லுக்கு சர்வதேச விருது: செம்ம சந்தோஷத்தில் நயன்- விக்கி
Tamil film Koozhangal wins the Tiger Award tamil news: குடிகார அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான உறவை மண் வாசம் மாறாமல் கதைப்படுத்தி
காட்சி அமைத்துள்ளனர்.
Tamil film Koozhangal wins the Tiger Award tamil news: குடிகார அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான உறவை மண் வாசம் மாறாமல் கதைப்படுத்தி
காட்சி அமைத்துள்ளனர்.
Tamil cinema news in tamil: அறிமுக இயக்குனர் வினோத் ராஜ் பிஎஸ் இயக்கி, யுவன் சங்கர் ராஜா இசைமைத்துள்ள 'கூழாங்கல்' திரைப்படத்தை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிடுகின்றனர். இந்த திரைப்படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற 50 வது ரோட்டர்டேம் சர்வதேச திரைப்படவிழாவில் டைகர் விருதை வென்றுள்ளது. அதோடு டைகர் விருதைப் பெறும் முதல்த் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும், இந்தியாவில் இது 2வது திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் சனல்குமார் சசிதரன் இயக்கிய 'செக்ஸி துர்கா' என்ற மலையாளப் படத்துக்கு இந்த விழாவில் விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisment
ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில், சர்வதேச அளவில் இயக்கப்படும் சுயாதீனமான மற்றும் சோதனை திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில் இயக்குனர் அருண் கார்த்திக்கின் 'நசீர்' திரைப்படம் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான 'நெட்பாக்' விருதை வென்றிருந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
"2021ம் ஆண்டுக்கான டைகர் விருதை கூழாங்கல் திரைப்படம் பெற்றுள்ளது. எங்கள் கடின உழைப்பு, பொறுமை மற்றும் கனவு இறுதியாக நிறைவேறியுள்ளது. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி" என்று உணர்ச்சி ததும்ப இயக்குனர் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
'கூழாங்கல்' குடிகார அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான உறவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம்எளிமையான தலைப்பை கொண்டிருந்தாலும் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதை அம்சங்களையும், காட்சிகளையும் கொண்டுள்ளது. யுவனின் இசை படத்திற்கு கூடுதல் வலுவாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
"டைகர் விருதை வென்ற முதல் தமிழ்த்திரைப்படம் கூழாங்கல். இயக்குனர் வினோத்தின் கடின உழைப்பால் அவரது முதல் படத்திலேயே அவருக்கு இவ்வளவு பெரிய மரியாதை கிடைத்துள்ளது. அதோடு இது ரவுடி பிக்சர்ஸ் வெளியீடும் முதல் திரைப்படமாகவும் அமைந்துள்ளது. எனவேநாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். உங்களுடைய அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. வினோத் மற்றும் குழுவுக்கு நன்றி" என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
டைகர் விருதை பெற்றுக் கொள்ள படக்குழுவுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வேஷ்டி, புடவையில் சென்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகை நயன்தாரா"கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்ததில் தயாரிப்பு குழு மிகவும் பெருமை அடைகிறது" என்று தெரிவித்துள்ளார்.