நாய் சேகர் ரிட்டன்ஸ்… இணையத்தை தெறிக்க விடும் வடிவேலுவின் புதுப்பட பர்ஸ்ட் லுக்!

Vadivelu’ s film titled ‘Naai Sekar Returns’ poster release Tamil News: நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கர்களால் அதிகமாக பகிரப்பட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamil cinema news in tamil: Vadivelu’ s film titled 'Naai Sekar Returns' poster release

Actor vadivelu News in tamil: நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்ட நிலையில், அவருடைய நண்பரும் ஆதர்ச இயக்குநருமான சுராஜ் இயக்கத்தில் படம் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ள இந்தப் படதிற்கு முதலில் ‘நாய் சேகர்’ எனத் தலைப்பு வைக்க படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்துள்ள படத்துக்கு இதே தலைப்பு வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு விட்டது. எனவே, ஒரு நல்ல தலைப்பை தேடி வந்த வடிவேலு – சுராஜ் கூட்டணி ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்னும் தலைப்பை லாக் செய்ததது

இந்நிலையில், படக்குழு முடிவு செய்த ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும், வடிவேலுவுடன் நடிக்க முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளித்திரையில் தோன்றவுள்ள நடிகர் வடிவேலு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கர்களால் அதிகமாக பகிரப்பட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema news in tamil vadivelu s film titled naai sekar returns poster release

Exit mobile version