இயக்குனர் ஜகநாதன் கவலைக்கிடம்

Director SP Jananathan hospitalized Tamil news: பிராபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தீவிர சிகிக்கை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளார்.

Tamil cinema news in tamil Vijay Sethupathi’s Laabam director SP Jananathan hospitalized

Tamil cinema news in tamil: சமத்துவ சித்தாதங்கள் மற்றும் புரட்சிகர கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் பிராபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவர் 2003ம் ஆண்டு வெளியான ‘இயற்கை’ திரைப்படதிற்கு தேசிய விருது பெற்றார். இவர் இயக்கி ‘ஈ’, ‘பேராண்மை’ மற்றும் ‘புறம்போக்கு எனும் பொதுவுடைமை’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அதன் எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் எடிட்டிங்கில் ஈடுபட்டிருந்த இயக்குனர் ஜனநாதன், உணவு அருந்துவதற்காக வீட்டிற்கு சென்றபோது மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இயக்குனரை தேடி வந்த உதவியாளர் அவரை உனடியாக மருத்துமனையில் சேர்த்துள்ளார்.

“அவரது நோயின் முழு விவரங்களும் எங்களுக்குத் தெரியாது. நரம்பியல் நிபுணரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். ஐ.சி.யு – விற்குள் அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை”என்று லாபம் திரைப்படத்தில் பணியாற்றி வரும் அசாகன் என்பவர் கூறியுள்ளார்.

தீவிர சிக்கிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் இணைய தளங்களில் அவர் இறந்து விட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், ‘இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது சிக்கிசை பெற்று வருகிறார், அவர் காலமாகி விட்டார் என்று சிலர் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். யாரும் அதை நம்ப வேண்டும்’ என்று லாபம் படத்தின் தயரிப்பு நிறுவனமான 7சி எஸ் என்டர்டைன்மெண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Web Title: Tamil cinema news in tamil vijay sethupathis laabam director sp jananathan hospitalized

Next Story
வில்லி ‘கதை’யை முடிச்சாச்சு… விடைபெறும் முக்கிய சீரியல்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com