வடிவேலுவுக்கு பதில் யோகி பாபு: ஜரூராக கிளம்பிய ‘இம்சை அரசன்’ இயக்குனர்

Vadivelu’s ‘Imsai Arasan 24 aam Pulikesi’ movie dropped director Chimbudevan signs with Yogi Babu Tamil News: ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தில் வடிவேலுவுக்குப் பதிலாக யோகி பாபு நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Tamil cinema news in tamil: Yogi Babu to act in Vadivelu dropped movie directed by Chimbudevan 

Tamil cinema news in tamil: தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இயக்குநர் சுராஜ் இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tamil cinema news in tamil: Vadivelu’ s film titled 'Naai Sekar Returns' poster release

முன்னதாக நடிகர் வடிவேலு ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ என்கிற படத்தின் மூலம் தான் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்க, இயக்குநர் சிம்புதேவன் இயக்கிய இருந்தார். படம் வெளியாகிய சில நாட்களிலே மாபெரும் வெற்றியைப் பெற்றது. நடிகர் வடிவேலுவின் புதிய மைல்கல்லாக இப்படம் அமைந்து போனது.

இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, சிம்புதேவன் நடிகர் வலுவேலுவை வைத்து ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தையும் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக படம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் வடிவேலு பெரும் சர்ச்சையில் சிக்கினார். எனவே, அவரால் தொடர்ந்து படங்களும் நடிக்க முடியாமலும் போனது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் வடிவேலு, ஷங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டு, ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ முற்றிலுமாக கைவிடப்பட்டது என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கான சம்பளம் மற்றும் கால்ஷீட் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதற்கிடையில், இயக்குநர் சிம்புதேவன் மீனவர்களை மையமாக வைத்து ஒரு புதிய படத்தைத் தொடங்கியுள்ளார். அதில், நடிக்க நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தில் வடிவேலுவுக்குப் பதிலாக யோகி பாபு நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அது புதிய பாடமாக இருக்கும் என்று தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதும் இன்னும் வெளிவரவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema news in tamil yogi babu to act in vadivelu dropped movie directed by chimbudevan

Exit mobile version