இசைஞானி இளையராஜாவின் இசை இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது . இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார்.
Advertisment
இவர் கிட்டத்தட்ட 1,400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசை கச்சேரிகளை பல நாடுகளில் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம், இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் சென்னையில் நாளை 'ராக் வித் ராஜா' என்ற இசைக்கச்சேரி நடக்கவுள்ளது. இதில் இளையராஜாவும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாடல்களை பாடவுள்ளனர்.
"எனது கனவு நனவாகப் போகிறது" எனக் குறிப்பிட்டு டுவிட்டரில் தேவி ஸ்ரீ பிரசாத் பதிவிட்டிருந்தார்.
Advertisment
Advertisements
இதற்கு இளையராஜா அவருக்கு பதிலளித்துள்ளார் அந்த பதிவில், "உன்னை மேடையில் சந்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
வசூல் சாதனை புரிந்துவரும் பாலிவுட் படம்
வசூல் சாதனை படைக்கும் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடியை நெருங்குகிறது.
விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'.
1990களில் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதைக்களமாக கொண்டு தயாராகியிருந்த இந்த திரைப்படம் கடந்த 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
தற்போது இந்த படம் நாடு முழுவதும் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் படத்தை பாராட்டினார். இன்று அல்லது நாளை இந்த திரைப்படம் ரூ.100 கோடி வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் உலகளவில் இந்த திரைப்படம் ரூ.70 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஷ்ணு விஷாலின் புதிய பட டீசர்
விஷ்ணு விஷால் நடித்துள்ள 'மோகன் தாஸ்' திரைப்படத்தின் டீசர் யூ-டியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மோகன் தாஸ் திரைப்படத்தை 'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'மோகன் தாஸ்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
சமீபத்தில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளியான 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மோகன்தாஸ் டீசரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பீஸ்ட் படத்தில் நடிக்ர விஜய் பாடிய பாடல்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி உள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள பாடலான “ஜாலியோ ஜிம்கானா” வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியிடப்படும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தில் ஏற்கனவே முதல் பாடலாக “அரபிக்குத்து” வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பலத்த வரவேற்பைப் பெற்றது நினைவுகூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“