Advertisment

பச்சைக்கிளி… முத்துச் சரம்… முல்லைக் கொடி..! மாஸ்டர் நாயகி அல்ட்ரா கிளாமர் போட்டோ ஷூட்

Actress Malavika Mohanan glamorous photos viral Tamil News: நடிகை மாளவிகா மோகனனின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Tamil cinema news Malavika Mohanan glamorous photos goes viral

Tamil cinema news: மலையாள நடிகையான மாளவிகா மோகனன், 2013-ம் ஆண்டு மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிபில் வெளியான ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்த இவருக்கு, தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படம் மூலம் மாஸ் என்ட்ரி கிடைத்தது. இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டது.

Advertisment
publive-image

அதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'மாஸ்டர்' படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தமிழில் முன்னணி நடிகை மாறிய இவர், தற்போது சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டி43’ படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

publive-image
publive-image

இதற்கிடையில் தன்னை போட்டோஷூட்டில் பிசியாக வைத்துக்கொள்ளும் நடிகை மாளவிகா மோகனன், சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்ககளை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இதற்கு ரசிகர்களும் லைக்ஸ் மழை பொழிகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் பச்சை நிற கவர்ச்சி உடையில் மலையில் இருந்து அவர் எடுத்துக் கொண்ட போட்டோஷூட்டின் கவர்ச்சி புகைப்படங்ககளை, தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அவை அவரது ரசிகர்களால் வரவேற்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " ( https://t.me/ietamil )

Dhanush Vijay Sethupathi Dulquer Salmaan Malavika Master Movie Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment