/tamil-ie/media/media_files/uploads/2021/02/periyurum.jpg)
Pariyerum Perumal Actor Thangaraj : கடந்த 2018-ம் ஆண்டு தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலநிலையை எடுத்துரைக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின மூலம் தயாரித்திருந்தார்.
இந்த படத்தில் கதிரின் அப்பாவாக நடித்து புகழ் பெற்றவர் தங்கராஜ். நாட்டுப்புற கலைஞரான இவர், இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். தற்போது இவர் நெல்லையில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் இவரின் வீடு பலத்த சேதமடைந்துள்ளார். இதனையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அவரின் வீட்டை சீரமைத்து தருவதாக கூறியுள்ளார்.
ஆனால் தற்போது தங்கராஜ் தனது ஏழ்மை நிலையில், சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கஷ்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு, பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், அப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் சங்கம் ஏதேனும் உதவி செய்யுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.