ரீவைண்ட் 2020 : கலைத்துறையினருக்கு மோசமான ஆண்டு… பிரபலங்களின் எதிர்பாரா மரணங்கள்

தென்னிந்திய சினிமாவிலும் பல நட்சத்திரங்களின் திடீர் மரணம் ரசிகர்களை உலுக்கியது

tamil cinema news rewind 2020
tamil cinema news rewind 2020

tamil cinema news rewind 2020 : 2020 சினிமா திரைத்துறையினருக்கு மட்டுமில்லை ஒட்டு மொத்த உலகத்திற்கே மோசமான ஆண்டு தான். மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு டிசம்பர் வரை முடியவில்லை. பலரும் வேலை இழந்து, அதிகப்படியான மன உளைச்சல், இதில் உயிர் பயம் வேறு என 2020 ஆம் ஆண்டு முழுவதும் ப்ரேக்கிங் நியூஸ்களோடே நகர்ந்தது.

கூடவே, இந்தாண்டு திரையுலகில் எதிர்பாராத மரணங்கள், அதிர்ச்சி தரும் தற்கொலைகள் என ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி மேலும் பதற்றத்தை தந்தன. இன்று காணும் சிறப்பு தொகுப்பு 2020 ஆம் ஆண்டு நம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பிரபலங்களின் மரணங்கள் தான்.

1. சேது

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான டாக்டர் சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். நடிகர் சேதுராமன் ஒரு தோல் சிகிச்சை நிபுணரும் கூட. இவர் தனியாக கிளினிக் நடத்தி வந்தார். ஏராளமான சினிமா பிரபலங்கள் அவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சேதுராமன் மரணமடைந்தார்.

2. விசு

இந்த ஆண்டு உலுக்கிய மரணங்களில் விசுவின் மரணம் ஒன்று. எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் விசு. அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் குடும்பச் சித்திரங்கள்தான். சிறு நீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

3. இர்பான் கான்

30 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வந்தவர் இர்பான் கான். ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ள அவர், ஹாலிவுட்டிலும் தி அமேசிங் ஸ்பைடர் மேன், லைஃப் ஆப் பை, ஜுராசிக் வேர்ல்டு போன்ற படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இர்பான் கான் காலமானார்.

4. ரிஷி கபூர்

ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அமெரிக்கா சென்று ஓராண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

5. சிரஞ்சீவி சர்ஜா

தென்னிந்திய சினிமாவை உலுக்கிய மரணங்களில் ஒன்று நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம். நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சர்ஜா வாயுபுத்ரா என்ற கன்னட் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார். சிரஞ்சீவி சர்ஜா 2018ஆம் ஆண்டுதான் பிரபல நடிகையான மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரு உயிரிழக்கும் போது அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

6. சாச்சி.

தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் சாச்சி. சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

7. பாடகர் எஸ்பிபி

ஒட்டு மொத்த இசைப்பிரியர்களையும் 2020ஆம் ஆண்டில் உலுக்கிய மரணம் பாடும் நிலா என்றழைக்கப்படும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மரணம். லேசான கொரோனா அறிகுறியுடன் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா நெகட்டிவான நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி திடீரென தனது 74 வயதில் காலமானார்.

8. சாட்விக் போஸ்மேன்

உலக மக்களை பெரிதும் கவர்ந்த படம் அவெஞ்சர்ஸ். இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் உலக மக்களிடையே மிகவும் பிரபலம். அந்த வகையில் இப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சாட்விக் போஸ்மேன். 43 வயதான இவர் கடந்த 4 வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு பேரிழப்பு என்றே சொல்லலாம்.

9. வடிவேல் பாலாஜி

சின்னதிரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

10. தவசி

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்த இவர், அப் படத்தில் இடம்பெற்ற ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற டயலாக்கின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தவசி கடந்த நவம்பர் 23-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

11. சித்ரா

பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் தனது காதலரான ஹேம்நாத்தை பதிவு திருமணம் செய்து கொண்டார். வரும் பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரான ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

12. சுஷாந்த் சிங்

பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் என்றால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம். 34 வயதே ஆன சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தற்கொலையா? கொலையா? என சந்தேகம் எழுந்த நிலையில், அவரது மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

13. புளோரண்ட் பெரேரா

கயல், எங்கிட்ட மோதாதே, வேலையில்லா பட்டதாரி 2, ராஜா மந்திரி, தொடரி போன்ற படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி இவர் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி உயிரிழந்தார்.

14. அனில் நெடுமங்காடு:

மலையாளத்தில் “அய்யப்பனும் கோஷியும்” “காமாட்டிபாதம்” “பாவாட” உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அனில் நெடுமங்காடு. அவர் டிசம்பர் 25ம் தேதி தோடுபுழாவில் உள்ள மலங்கர அணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

15. அருண் அலெக்சாண்டர்:

கோலமாவு கோகிலா, பிகில், மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரும், டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் (48) டிசம்பர் 29ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

16. பரவை முனியம்மா :

பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் மார்ச் காலமானார். அவருக்கு வயது 83.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema news rewind 2020 tamil celebrities death

Next Story
என்னங்க மீனா… நீங்க நல்லவங்களா… கெட்டவங்களா?vijay tv, pandian stores serial, pandian stores meena character changed, pandian stores dhanam character, பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் டிவி, மீனா, தனம், கண்ணன், pandian stores mullai, viral video, pandian stores serila promo, vijay tv serials
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express