நாட்டுப்புற பாடலுக்கு சொந்தம் கொண்டாடிய சூப்பர் சிங்கர் ஜோடி மீது பரபரப்பு புகார்

Super Singer Senthi Rajalakshmi : சூப்பர் சிங்கர் புகார் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதி மீது அடுத்தவர் பாடலை செந்தம் கொண்டாடியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Super Singer Senthi Rajalakshmi : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற தம்பதி செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புற பாடல்களை பாடி தமிழகம் முழுவதும் பிரபலமடைந்த இவர்கள், தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மேடை கச்சேரிகளில் பாடி வருகின்றனர். நாட்டுபுற கவிஞர் செல்லதங்கையா என்பவரின் பாடல்வரிகளுக்கு உயிர்கொடுத்து வரும் செந்தில் கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதி மீது தற்போது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரமல்லி என்ற புனைப் பெயரில் பாடல்களை இயற்றி பாடிவரும் டாக்டர் கலைச்செல்வியின் எழுத்தில் உருவான ”மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது” என்ற பாடல் அவரின் குரலில் யூடியூப்பில் வெளியாகி தற்போது 2 கோடிக்கு அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த கிராமிய பாடலை பல கோவில் விழாக்களில் பாடிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதி, அந்த பாடலை தங்கள் தோழி இயற்றியதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் நடந்த கோவில் விழா மேடைக்கச்சேரி ஒன்றில், இந்த பாடலை பாடிய செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதி, இந்த பாடல் தனது தங்கை கலைவாணி என்பவர் இயற்றி பாடியதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மதுரமல்லி, தான் இயற்றி பாடிய இந்த பாடலை, யாரோ ஒரு பெண் எழுதியதாக ராஜலட்சுமி சொந்தம் கொண்டாடுகிறார். இது அவரின் கீழ்த்தனமான செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தபாடலை இயற்றி பாடியதற்கு ஆதரமாக யூடியூப்பில் அந்த பாடல் இன்றளவும்  ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ள அவர், ராஜலட்சுமி தனது தவறான கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாதாரண நிலையில் இருந்து தற்போது புகழின் உச்சிக்கு சென்றுள்ள நாட்டுப்புற பாடல் தம்பதி செந்தில் ராஜலெட்சுமி ஆகியோர் மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கிராமிய பாடகி மதுர மல்லி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ஆனால் தன்மீதான குற்றச்சாட்டை ராஜலட்சுமி மறுத்துள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema news super singer senthi rajalakshmi copy song case

Next Story
இத்தனை நாள் எபிசோட்டில் இன்னிக்கு தான் அல்டிமேட் சீன்… மனைவிக்காக சரவணன் எடுத்த முடிவு!raja rani hotstar raja rani serial vijaytv
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com