/tamil-ie/media/media_files/uploads/2021/02/vijay-rajini.jpg)
Thalapathy Vijay Asked Chance to act With Rajinikanth : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவருக்கு தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாத்துறையில் உள்ள பல நடிகர்களும் ரஜினிகாந்தின் ரசிகராக உள்ளனர். ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
70 வயதாகும் ரஜினிகாந்த் இன்றும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் நடிகைகள் மட்டுமல்லாது நடிகர்களும் அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகராக உள்ள தளபதி விஜய், ரஜினியின் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு இணையாக அதிக ரசிகர் பட்டாளங்களை வைத்தள்ள தளபதி விஜய், ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரின் அடுத்தடுத்த படங்களை இயக்குநர்கள் வரிசைக்கட்டி காத்திருக்கும் நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படையப்பா படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.
ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் நாசர், ராதாரவி, ஆகியோரது நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் ரஜினியின் மாப்பிள்ளையாக நடிகர் அப்பாஸ் நடித்திருப்பார். படத்தில் இறுதிக்கட்டத்தில் ஒரு சில நிமிடங்கள் வரும் இந்த கதாப்பாத்திரத்தில், ரஜினியுடன் இணைந்து நடிக்க தளபதி விஜய் வாய்ப்பு கேட்டதாக அவரே ஒரு மேடைப்பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
Thalaivar @rajinikanth Hardcore Fan ???? Thalapathy @actorvijay asked The Role of Abbas in #Padayappa to get a chance of acting with his Favorite ❤️star Thalaivar !
Hope Directors ✅ Fullfill his Lifetime dream in Upcoming Movies !! #Annaatthe#Master
— K@ss!m A@z!〽️ (@AazimKassim) February 20, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.