/indian-express-tamil/media/media_files/615ZbVUbSzlxEONrZnJA.jpg)
கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தாலும், விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம், ரூ100 க்ளப்பில் இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் நட்சத்திர இயக்குனராக மாறியவர் பா.ரஞ்சித், அட்டக்கத்தி படத்தை இயக்கிய இவர், அடுத்து கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினிகாந்த் நடிப்பில், கபாலி, காலா, ஆர்யா நடிப்பில் சார்ப்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இவர், அடுத்து விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், விக்ரம், பசுபதி, ஆங்கில நடிகர் டேனியல், பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் தயாராகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில், சாதனை படைத்து வந்த தங்கலான், கடந்த வாரம் வெளியான மாரி செல்வராஜூவின் வாழை திரைப்படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருப்பதால், தங்கலான் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும் தற்போது தங்கலான் படம் வசூலில் ரூ100 கோடியை எட்டியுள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
A century of triumph... A victory for our people... 🔥
— Studio Green (@StudioGreen2) August 30, 2024
The glorious epic, #Thangalaan crosses 100cr+ global gross with all the love and support from fans, press and media ❤
🎫 https://t.co/aFyx3NkXl0#ThangalaanRunningSuccessfully@Thangalaan@chiyaan@beemji@GnanavelrajaKe… pic.twitter.com/LuJuRcLelq
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும், பலரும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.