தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கும் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் நடித்த அற்புதமான காட்சிக்கு முக்கிய காரணம் சிவாஜி கணேசன் தாமதாமாக வந்தது தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் தனது காமெடி மற்றும் உடல்மொழியின் மூலம் மக்களை சிரிக்க வைத்த கலைஞர்களில் முக்கியமானவர் நாகேஷ். பல கட்ட போராட்டத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமல்லாமல், ஜெய் சங்கர், முத்துராமன், ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணநை்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
அந்த வகையில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் திருவிளையாடல். சிவாஜி சாவித்ரி இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் தருமி வேடத்தில் நாகேஷ் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த காலக்கட்டத்தில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்த நாகேஷ் இந்த படத்திற்காக ஒன்றரை நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
அதன்படி நாகேஷ் தனியாக வரும் காட்சிகள் அனைத்தும் ஒருநாள் படமாக்கப்பட்டது. இதில் குறுக்கும் மறுக்குமாக நடந்து ‘’ அவன் வரமாட்டான் அவன் வரமாட்டான் எனக்கு பரிசு கிடைக்காது என்றுநு புலம்பியபடியே நடந்திருப்பார் நாகேஷ். இந்த காட்சி இன்று பார்த்தாலும் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. இந்த காட்சி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்து சிவாஜி கணேசன் தான்.
இந்த காட்சி படமாக்கப்படும்பொது, சிவாஜி மேக்கப் போட்டு வர லேட் ஆகும் என்பதால் நாகேஷ் தொடர்பான காட்சிகளை மட்டும் படமாக்கிக்கொள்ள இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அனுமதி கொடுத்துள்ளார். அதன்பிறகு தான் இந்த காட்சியை படமாக்க நாகேஷ் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் நடிப்பை பார்த்த சிவாஜி, தனியாக வரும் காட்சிகளில் பிரமாதமாக நடித்திருந்த நாகேஷ்க்கு, சிவாஜியே பாராட்டு தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“