scorecardresearch

தமிழ் படத்தில் மீண்டும் அனுஷ்கா? விரைவில் கே.ஜி.எஃப். டிரைலர்.. மேலும் செய்திகள்

நடிகர் வெங்கடேஷுடன் ஒரு படத்தில் ராணா நடித்து வருகிறார். அது விரைவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

தமிழ் படத்தில் மீண்டும் அனுஷ்கா? விரைவில் கே.ஜி.எஃப். டிரைலர்.. மேலும் செய்திகள்

தெய்வத்திருமகள், மதராசப்பட்டினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘சிங்கம் 3’ படத்தில் கடைசியாக  அனுஷ்கா ஷெட்டி நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குநர் ஏ.எல்.விஜய் படத்தில் நடிக்கவுள்ளார்.

விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவரும் அனுஷ்காவின் இந்தப் புதிய படம் தொடர்பான அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எப் படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நட்சத்திரம் யஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கே.ஜி.எப் – 2 படத்தின் டிரைலர்  வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கே.ஜி.எப்-2 டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை  6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

கமல்ஹாசனின் விக்ரம் படப்படிப்பு நிறைவு

வித்தியாசமாக ட்வீட் வெளியிட்ட படத்தின் இயக்குநர்

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘110 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு நிறைவடைந்தது. மொத்த படக்குழுவிற்கும் உங்களின் கடினமான உழைப்பிற்கும் என்னுடைய நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், லோகேஷ் ஆக்‌ஷன் சொல்ல பகத் பாசில் துப்பாக்கியால் சுடுகிறார் பின்னர் படக்குழுவினர் அனைவரும் இணைந்து ‘இட்ஸ் ஏ ராப்’ என குரலெழுப்புகின்றனர்.

அமிதாப் பச்சனை பாராட்டிய அமீர் கான்</strong>

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் பார்சே.இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் ஸ்லம் சாக்கரின் நிறுவனர். சமூகத்தில்  பின்தங்கிய குழந்தைகளுக்காக இவர் தொடங்கிய கால்பந்து அகாடமி தான் ஸ்லம் சாக்கர்.

இவர் தன் ஓய்வுக்குப் பிறகு பெற்ற ரூ.18 லட்சத்தில் சில ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.அந்த பணத்தில் இவர் கால்பந்து அகாடமியை தொடங்கியுள்ளார்.

தற்போது இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. அதற்கு “ஜுன்ட் ” என பெயரிட்டுள்ளனர். விஜய் பார்சே கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 4 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த முன்னணி பாலிவுட் நடிகர்  அமீர் கான் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளீர்கள். ஆனால் இந்த திரைப்படம் சிறப்பு வாய்ந்தது. மிகவும் சிறப்பாக நடித்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண் படம் 2-ஆம் பாகம்?

பவன் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான படம் பீம்லா நாயக். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சாகர் கே சந்திரா இயக்கியுள்ளார்.  பாகுபலியில் வில்லனாகவும், காடன் படத்தில் கதாநாகனாகவும் நடித்து அசத்தியவர். 

மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் ஐயப்பனும் கோஷியும் படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்தப் படத்தின் ரீமேக் தான் பீம்லா நாயக்.

இந்நிலையில் நடிகர்  ராணா இண்டியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு அளித்த பேட்டியில் பீம்லா நாயக் 2 ம் பாகம் வெளியானால் மறுபடியும் நாங்கள் சண்டையிட்டுக் (திரையில்) கொண்டு இருப்போம். அது மிகவும் கஷ்டம் என்று கருதுகிறேன் என்றார்.

அடுத்ததாக நடிகர் வெங்கடேஷுடன் ஒரு படத்தில் ராணா நடித்து வருகிறார். அது விரைவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema news update roundup bollywood kollywood419902