‘பேபி இஸ் ஆன் தி வே’: பாடகி ஸ்ரேயா நெகிழ்ச்சி பதிவு

Singer Shreya Ghoshal : பிரபல பின்ணணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.  

Singer Shreya Ghoshal Viral Instragarm Post : பிரபல பின்ணணி பாடகி ஸ்ரேயா கோஷல் தான் கர்ப்பமாக இருப்தை தனது ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில்,  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2000ம் ஆண்டு தனது 16-வயதில், ஜீ டிவி நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட ஸ்ரோயா தனது பாடல் மூலம் இந்த நிகழ்ச்சியில்,  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் சஞ்சய் லீலா பான்சாலியின் மனதை கவர்ந்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்க முடிவெடுத்த சஞ்சய், தனது அடுத்த படமான தேவதாஸ் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் இவரயே பாட வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பாடியுள்ள அவர் இன்று இந்தியாவே அறியும் புகழ்பெற்ற பாடகியாக மாறியுள்ளார்.

இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பாடல் பாடி அசத்தி வரும் இவர், கடந்த 2015ம் ஆண்டு சிலாதித்யா முகோபாத்யாயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருணத்திற்கு பிறகும் பல பாடல் பாடுவதில் பிஸியாக இருக்கும் ஸ்ரேயா தற்போது தனது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியை அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அவர் தனது வயிற்றை கைகளால் பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குழந்தை #Shreyaditya (ஸ்ரேயாதித்யா) இஸ் ஆன் இட்ஸ் வே! இந்த செய்தியை உஙகளுடன் பகிர்ந்து கொள்வதில் நானும் எனது கணவர் ஷிலாதித்யாவும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய உதயத்திற்காக நாங்கள் தயாராகி வருகிறோம். இதற்காக உங்கள் அனைவரின் அன்பும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு தேவை, ”என்று அவர் குறிப்பிட்டுள்ளர்.

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

ஸ்ரோயாவின் இந்த பதிவிற்கு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள், இந்த பதிவை, மில்லியன் கணக்கில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த பதிவிற்கு பிரபலங்கள், பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  ஸ்ரேயா கோஷலுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ள, இசையமைப்பாளர் இமான், “மனமார்ந்த வாழ்த்துகள் ஸ்ரேயா, உங்கள் அன்பானவரை எனக்காகவும் பாடத் தயார் செய்யுங்கள். அதுவரையிலும் ஆண்டவன் எனக்கு தொடர்ந்து இசையமைக்கும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கட்டும்,” எனக்  கூறியுள்ளார்.

இமானின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரேயா, உங்கள் வார்த்தைகள் மதிப்புமிக்கது, மிக்க நன்றி, மனதைத் தொட்டுவிட்டது. நீங்கள் சொல்வது உண்மையாகட்டும்,” என கருத்து தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema news update singer shreya ghoshal good news

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com