Advertisment

பிச்சைக்காரன் 2 முதல் இராவணக்கோட்டம் வரை... ஓடிடி-யின் இந்த வார தமிழ் படங்கள் பட்டியல்

ஒரு படம் திரையரங்கில் வெளியான 4 வாரங்களில் ஒடிடி தளத்தில் வெளியாவது வழக்கமாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Movie

தமிழ் சினிமா இந்த வாரம ஒடிடி வெளியீடு

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது போன்று ஒடிடி தளத்திலும் புதிய படங்கள் வெளியாவது கடந்த சில ஆண்டுகளாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள தமிழ் படங்கள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

கொரோனா காலக்கடத்தில் முடங்கி கிடந்த சினிமா உலகத்திற்கு கொஞ்சம் உயிர் கொடுத்தது ஒடிடி தளங்கள் தான். அதற்கு முன்பே ஒடிடி தளங்களில் தங்களது பணியை தொடர்ந்திருந்தாலும், கொரோனா காலக்கட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் முன்னணி நடிகர்களின் ஒரு சில படங்கள் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

கொரோனா காலக்கட்டம் முடிந்தும் சில படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகவது வழக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு படம் திரையரங்கில் வெளியான 4 வாரங்களில் ஒடிடி தளத்தில் வெளியாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

பிச்சைக்காரன் 2

,இசையமைப்பாளராக பல வெற்றிகளை கொடுத்திருந்தாலும் ஹீரோவாக விஜய் ஆன்டனிக்கு பெரிய வெற்றியை கொடுத்த படம் பிச்சைக்காரன். இந்த படத்தின் 2-ம் பாகம் கடந்த மே 19-ந் தேதி வெளியானது. விஜய் ஆன்டனியின் முந்தைய சில படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், பிச்சைக்காரன் 2 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் இருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக விஜய் ஆன்டனிக்கு பிச்சைக்காரன் 2 வெற்றிப்படமாக அமைந்துள்ள, இந்த படம் வரும் 17-ந் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

ஃபர்ஹானா

சமீப ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் ஃபர்ஹானா. வேலைக்கு செல்லும் ஒரு பெண் சந்திக்கும் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் நாளை (ஜூன் 16) சோனி லிவ்வில் வெளியாக உள்ளது.

.இராவணக்கோட்டம்

சினிமாவில் வாரிசு நடிகராக களமிறங்கிய சாந்தனுவுக்கு ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வெளியான படம் தான் இராவணக்கோட்டம். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் சீமை கருவேலமர அரசியலை பற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது. இந்த படம் நாளை (ஜூன் 16) அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment