தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், வெளியாகி முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடம் பிடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்து லைகா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் 'லியோ' படம் வெளியான முதல் வார முடிவில் உலகளவில் ரூ 461+ கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதன் மூலம் தமிழ்சினிமா வரலாற்றில் ஒரு வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற நிலையை உறுதிப்படுத்தியது.
ஆனால் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த பட வரிசையில் முதலிடத்தில் இருப்பது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் தான் . ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான சையின்ஸ் பிக்ஷன் ஹாரார் படமாக வெளியான 2.0 திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ 500 கோடியைத் தாண்டியது என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.
இந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் '2.0' தயாரிப்பாளர்களின் ட்வீட்டை ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். இதன் விளைவாக, 'லியோ' தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்பட்ட பதிவு சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. சரியான புள்ளிவிவரங்களின்படி, '2.0' 1 வார இறுதியில் ரூ. 500 கோடியுடன் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படத்தின் தலைப்பைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ள லியோ திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ஆல் டைம் பெஸ்ட் படமாக உருவெடுத்துள்ளது, மேலும் இந்த படம் விரைவில் உலகம் முழுவதும் ரூ.500 கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியான லியோ அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“