Advertisment
Presenting Partner
Desktop GIF

கர்வத்தில் பந்தயம் கட்டிய என்.எஸ்.கே... மேடையில் கலக்கிய எழுத்தாளர் : பந்தயத்தில் ஜெயித்தது யார்?

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
NS Krisha

என்.எஸ்.கிருஷ்ணன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காரில் சென்றுகொண்டிருக்கும்போது கர்வத்தால் பந்தயம் கட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் இறுதியில் தனது தவறை உணர்ந்து பொதுமேடையில் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்

Advertisment

க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இவர்1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து என்.எஸ்.கிருஷ்ணன் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.  மேலும் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன்எழுத்தாளர் சின்ன அண்ணாமலையிடம் பந்தயம் வைத்து தோல்வியை சந்தித்துள்ளார்.

என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பின் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் காந்தி இறந்துவிட்ட நிலையில், அவருக்கான நினைவஞ்சலி கூட்டம் தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில் சென்னையில் சக்கர்பாபா வித்தியாலயாவில் நடைபெற்ற கடைசி நாள் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக சின்ன அண்ணாமலை மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக இருவரும் காரில் சென்றுள்ளனர்.

அப்போது என்.எஸ்.கிருஷ்ணன் இன்றைக்கு நான் முதலில் பேசிவிடட்டுமா என்று கேட்க, சின்ன அண்ணாமலை அதற்கென்ன தாராளமாக பேசுங்கள் நான் பிறகு பேசுகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட என்.எஸ்.கே, நான் பேசி முடித்தவுடனே கூட்டம் கலைந்துவிடுமே பிறகு நீங்கள் காலியாக உள்ள நாற்காலிகளை பார்த்து பேசுவீர்களா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட சின்ன அண்ணாமலை அப்படி இல்லை நான் பேசினாலும் மக்கள் ரசிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட என்.எஸ்.கே, நான் ரூ1000 பந்தயம் கட்டுகிறேன். நான் பேசி முடித்தவுடன் அந்த கூட்டத்தை அரைமணி நேரம் தக்கவைத்து நீங்கள் பேசுங்கள் என்று சொல்ல சின்ன அண்ணாமலையும் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு நிகழ்ச்சி தொடங்க, என்.எஸ்.கே முதலில் பேசி தனது உரையை முடித்தவுடன், சின்ன அண்ணாமலை பாட தொடங்கியுள்ளார். அவரின் பாடலை கேட்டு கூடியிருந்த அனைவரும் பாட தொடங்கியுள்ளனர். இந்த பாடல் முடிந்தவுடன், நாம் அனைவரும் காந்தியின் பக்தர்கள் அவரைப்போல் கூட்டு தியானம் செய்வோமா என்று கேட்க, அனைவரும் செய்வோம் என்று பதில் அளிக்கின்றனர்.

அதன்பிறகு காரில் வரும்போது, என்.எஸ்.கேவிடம் இன்று முதலில் நான் பேசி விடுகிறேன். நீங்கள் பேசினால் உங்கள் பேச்சை கேட்டவுடன் மக்கள் கலைந்து சென்றுவிடுவார்கள். என் பேச்சை கேட்க, யாரும் இருக்கமாட்டார்கள் என்று சொன்னேன். இதை கேட்ட என்.எஸ்.கே, இன்றைய கூட்டத்திற்கு வருபவர்கள் உங்களுக்காகவோ அல்லது எனக்காவோ வரவில்லை. காந்திக்காக வந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக நம் இருவரில் யார் முதலில் பேசினாலும் கூட்டம் முடியும் வரை அனைவரும் கலையாமல் இருப்பார்கள் என்று உங்கள் கலைவாணர் சொன்னார். அவர் சொன்னதை போல் நீங்கள் எல்லோரும் நான் பேசி முடிக்கும் வரை இருப்பீர்களா என்று கேட்டுள்ளார் சின்ன அண்ணாமலை. மக்கள் கூட்டமும் இருப்போம் என்று கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே என்.எஸ்.கே எழுந்து சின்ன அண்ணாமலை மாற்றி சொல்கிறார். அவர் சொன்னதை எல்லாம் நான் தான் சொன்னேன்.

மறைந்த பிறகும் மகாத்மா யாருக்குமே கர்வம் வரக்கூடாது என்று பாடம் கற்பித்திருக்கிறார் என்று சொல்லி பந்தய பணம் ரூ1000 சின்ன அண்ணாமலையிடம் கொடுக்க, அவர் அதை சகர்பாபா வித்தியாலாயாவுக்கு நன்கொடியாக அளித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

N S Krishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment