தி ரோட், ரத்தம், இறுகப்பற்று... ஒரே நாளில் வரிசை கட்டும் 9 படங்கள் : லியோ தாக்கம் தான் காரணமா?

அக்டோபர் மாதம் முதல் வாரம் முடிய உள்ள நிலையில், நாளை ஒரே நாளில் 9 தமிழ் படங்கள் வெளியாக உள்ளது.

அக்டோபர் மாதம் முதல் வாரம் முடிய உள்ள நிலையில், நாளை ஒரே நாளில் 9 தமிழ் படங்கள் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
irugapatru road raththam

ஒரே வாரத்தில் வெளியாகுமு் 9 படங்கள்

நடப்பு ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக லியோ படம் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த வாரம் 9 படங்கள் திரைக்கு வர உள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது சிறு பட்ஜெட் மற்றும் அறிமுக நடிகர்கள் நடித்துள்ள படங்களின் வெளியீடு தள்ளிப்போகும். அதிலும் குறிப்பாக ரஜனிகாந்த், கமல்ஹாசன், விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அந்த படங்களுக்குதான் முன்னுரிமை கொடுப்பார்கள்.

இதன் காரணமாக சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் முன்னணி நடிகர்களிக் படங்கள் வெளியாகும் நாளில் இருந்து ஒன்று அல்லது 2 வாரங்களுக்கு முன்னதாக சிறுபட்ஜெட் படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இது போன்ற தருணங்களில் அதிகமான படங்கள் வெளியாகும். இந்த வகையில் இந்த வாரம் (அக்டோபர் 6) 9 சிறுபட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது.

இதில் த்ரிஷா நடித்துள்ள தி ரோட், விக்ரம் பிரபு நடித்துள்ள இறுகப்பற்று, விஜய் ஆண்டனியின் ரத்தம், கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக 800, வனிதா விஜயகுமாரின் தில்லு இருந்தா போராடு, ஆடுகளம் நரேன் நடித்துள்ள இந்த க்ரைம் தப்பில்ல, சாட் பூட் த்ரி, எனக்கு என்டே கிடையாது, என் இனிய தனிமையே உள்ளிட்ட 9 படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது.

Advertisment
Advertisements

இதில் க்ரைம் த்ரில்லர் பாணியில் தயராகியுள்ள த்ரிஷாவின் தி ரோட் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளனர். த்ரிஷா முன்னணி கேரக்டரில் நடித்த எந்த படமும் அவருக்கு கை கொடுக்காத நிலையில், லியோ படத்திற்கு முன்பாக வெளியாகும் தி ரோட் படம் அவருக்கு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் கொலை படம் எதிர்பார்பை பூர்த்தி செய்யாததால் ரத்தம் படத்தை எதிர்பர்த்திருக்கிறார்.

சமீபகாலமாக வெற்றிப்படம் கொடுக்க தடுமாறி வரும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகியுள்ள இறுகப்பற்று திரைப்படம் காதல் மற்றும் ரொமான்ஸ் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் மோதல்களை அடிப்படையாக கொண்டது. படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: